தேவன் தம்முடைய சிந்தையை மாற்றிக் கொள்வாரா? Does God Change His Mind? 65-0427 தேவன் தம்முடைய சிந்தையை மாற்றிக் கொள்வாரா? Does God Change His Mind? 65-0427 1. ...தேவன். நம்முடைய தலையைத் தாழ்த்தி, சற்று நேரத்திற்கு நின்ற வண்ணம் இருப்போமாக. பரலோகப் பிதாவே, நீர் எங்களுக்குத் தந்த ஒவ்வொரு கிருபையான காரியத்திற்காகவும் உமக்கு நன்றி சொல்கிறோம். உம்முடைய எந்த ஒரு ஆசீர்வாதங்களுக்கும் – நாங்கள் தகுதியுள்ளவர்கள் அல்ல. நாங்கள் பெற்றிருக்கிற இந்த ஆசீர்வாதங்கள் நிச்சயமாகவே இலவசமானது (unmerited). தேவனே, நீர் தொடர்ந்து எங்களுடன் இருக்கவேண்டும் என்று ஜெபிக்கிறோம். உள்ளே நடந்து வந்து, கூட்டத்திலிருக்கிற அற்புதமான ஆவியை உணர்கையில், அது உம்மிடத்திலிருந்து வருகிறது என்பதை நான் அறிந்து கொள்கிறேன். ஆகவே, பிதாவே, இன்றிரவில் உம்முடைய பிரசன்னத்தினாலும், வியாதியுள்ளோரையும் துன்பப்படுகிறவர்களையும் சுகப்படுத்துவதன் மூலமாயும், தொடர்ந்து நீர் இக்கூட்டத்தை கனப்படுத்த வேண்டுமாய் ஜெபிக்கிறேன். இதை அருளிச் செய்யும். உம்முடைய பிரசன்னத்தினிமித்தம் இந்த இரவு ஒரு மகத்தான இரவாக, எளிதில் மறக்கமுடியாத கூட்டமாக இருப்பதாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 2. கடந்த மாலைநேரக் கூட்டத்தில் உங்களை அதிகநேரம் இருக்க வைத்துவிட்டேன் என்பதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். இன்று இரவு விரைவில் முடிக்க முயற்சி செய்கிறேன். ஆகவே நாம் வேகமாக செல்லமுடியும் – மேலும் வியாதியுள்ளவர்களுக்கு ஜெபிக்கமுடியும். கடந்த இரவு கூட்டத்தைக் குறித்து நிச்சயமாகவே நான் நல்ல விதமாக உணர்ந்தேன். அநேக ஜனங்கள் சுகத்தைப் பெற்றுக் கொண்டதைப் போல காணப்பட்டது. நான் அதிகமான ஒத்தாசையைப் பெற்றிருந்தேன், ஒவ்வொருவரும் ஜெபித்தார்கள், சேர்ந்தும் ஜெபித்தார்கள். அப்படிப்பட்ட வழிகளே நம்முடைய நிலைப்பாடு. ஆகவே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது, நாளை இரவில் நாம் வேறொரு இடத்தில் இருப்போம் என நினைக்கிறேன். அதுகுறித்து ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டாயிற்று என்று நினைக்கிறேன். அது வேறொரு... வேறொரு இடம்... நல்லது சரி. 3. இப்போது எண்ணாகமம் 22-ஆம் அதிகாரத்திற்கு திருப்புவோம். சீக்கிரமாக ஒரு சிறு பாடப்பொருளுக்காக, ஒரு சில வியாக்கியானத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அதன் பின்பு பெரும்பாலான நேரத்தை ஜெப வரிசை அமைத்து, ஜெபத்தில் செலவழிப்போம். 4. மிகவும் அதிக எண்ணிக்கையிலான ஜெப அட்டைகளை கொடுத்திருப்பதாக பில்லி கூறினான். சுமார் இருநூறு அல்லது முந்நூறு ஜெப அட்டைகள். மேலும் அவர்களை ஜெப வரிசையினூடாக நடத்துவதற்கு சற்று காலதாமதம் ஆகும். ஆகவே, நான் – நான் ஒரு சில நிமிடங்கள் பேசப்போகிறேன். கூடுமானால் முப்பது நிமிடங்களுக்கு மிகாமல் அதன்பின்பு ஜெப வரிசையைத் தொடர்ந்து ஆரம்பித்து வியாதியுள்ளவர்களுக்காக ஜெபிக்கலாம். உபாகமத்தில்... என்னை மன்னியுங்கள். 5. எண்ணாகமம் 22-ஆம் அதிகாரம் 31-ஆம் வசனம், இதை நான் வாசிக்க விரும்புகிறேன். அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலை குனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். 6. இப்போது, நம்முடைய சுகமாக்கும் ஆராதனையை நடத்துவதற்கான ஒரு அஸ்திபாரத்தைத் தரும் விதத்தில் இது ஒரு முரட்டுத்தனமான (rude) பாடப்பொருளாக தொனிக்கலாம். கூடுமானால் ஒன்பது மணிக்கு ஜெப வரிசையை தொடங்குவதற்கு நான் முயற்சி எடுப்பேன். இப்போது இன்று இரவில் தேவன் தம்முடைய சிந்தையை மாற்றுகிறவரா? என்ற பாடப்பொருளை எடுக்க விரும்புகிறேன். 7. நாம் நம்முடைய சிந்தையை மாற்றிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏனென்றால், நாம் - நாம் சற்று வேறுவிதமாக கற்றுக் கொள்கிறோம், நாம் தவறாயிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்கிறோம். 8. ஆனால் தேவன் தமது சிந்தையை மாற்றிக் கொள்வார் என்று நான் விசுவாசிப்பதில்லை. ஏனென்றால் அவ்வாறு அவர் மாற்றுவாரானால், பின்னர் நிச்சயமாக அவரால் முடிவற்றவராக இருக்க முடியாது. அதை அவர் மாற்றுவாரானால், அவரால் இன்னும் சற்று சிறப்பான ஒரு முடிவை எடுக்கமுடியும். ஆகவே அவர்... ஆனால் அவரில் நான் கொண்டிருக்கும் விசுவாசம் என்னவெனில், அவர் தமது சிந்தையை மாற்றிக் கொள்வதில்லை. ஏனென்றால், தேவன் ஒரு தீர்மானத்தை எடுப்பார் என்றால், அந்த தீர்மானத்தோடு அவர் தரித்திருக்க வேண்டும். பாருங்கள்? மேலும், ஒவ்வொரு முறையும் அதே பிரச்சனை ஏற்படுகிறது, அந்நிலையில், அவர் முதன்முறை என்ன செய்தாரோ அதே வழியாகத்தான் அவர் செயல்பட வேண்டியவராய் இருக்கிறார், இல்லாவிட்டால், முதன்முறையிலேயே அவர் தவறு செய்துவிட்டார். பாருங்கள்? ஆகவே, அது எங்கோ ஒரு – ஒரு அடிப்படையான விசுவாசத்தை நமக்கு தருகிறதாய் இருக்கிறது. இப்போது நம்மால்... 9. ஆம், விசுவாசம் என்பது வெறுமனே ஒரு உதிர்ந்த இலையை போன்றதல்ல, நீங்கள் இங்கே பறப்பதும் அல்லது வேறு எங்கோ ஓரிடத்தில் பறப்பதுமாக இருக்க முடியாது. அது நிச்சயத்தை பெற்றுக் கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும், அது நிலையான ஒன்றாக இருக்க வேண்டும். மேலும், இப்பொழுது நான் என்னுடைய விசுவாசத்தை ஏதோ சில கோட்பாடுகளின் மீது வைக்க முடியாது. நான் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பாக, அது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாய் இருக்க வேண்டும். 10. ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக, ஒரு மனைவியை தெரிந்தெடுப்பதுபோல தான். ஏன்? அவன், தான் திருமணம் செய்யப்போகிற அந்தப் பெண்ணின்மீது நம்பிக்கை வைக்க வேண்டியவனாய் இருக்கிறான். இல்லையெனில், அவன் நிச்சயமாக அநேக உபத்திரவங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறான். பாருங்கள்? ஆகவே அவன் பெற்றாக வேண்டும், நீங்கள் விசுவாசத்தை பெற்றிருக்க வேண்டும். சில ஆதாரப் பூர்வமான காரியங்கள், அதன் மேல் விசுவாசத்தை அடிப்படையாக வைக்க வேண்டும்; அவளுடைய வார்த்தையின் பேரில், அல்லது மற்றவர்கள் என்ன கூறினார்கள் என்பதன் பேரில், அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்றின் பேரில் அல்ல. அவனுடைய முகத்தை வைப்பதற்கு (face on – பிரதானமாக வைப்பதற்கு), விசுவாசத்தை வைப்பதற்கு, ஏதோ ஒன்றை அவன் பெற்றிருக்க வேண்டும். 11. ஆகவே தேவனை சந்திப்பதற்கு, என் விசுவாசத்தை அஸ்திபாரமிடுவதற்கு, அங்கே ஒரே ஒரு காரியம் தான் இருக்கிறது என்று நான் உணர்கிறேன். அது அவருடைய வார்த்தையே. 12. ஏனென்றால், நாம் பலவிதமான யோசனைகளைப் பெற்றுள்ளோம், கிட்டத்தட்ட நாம் எல்லோருமே. நாம் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏதோவொன்றைப் பற்றி பேசுவதில் கூட, ஏன்? நாம் உணவு உண்பதில்கூட வித்தியாசப்படுகிறோம்; நாம் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்களாக உருவாக்கப்பட்டுள்ளோம் (we are made different), பசியுணர்வு கூட ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது. எனவே, அது நம்முடைய சபைகளையும் கூட அந்த விதமாகவே ஆக்குகிறது. எது சரி, எது தவறு என்பதில்கூட அவர்களுடைய கருத்துக்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். அது நம் ஒவ்வொருவருக்கும் விருப்பத் தேர்வை தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு சிலாக்கியத்தை அளிக்கிறது. 13. ஆனால், என்னைப் பொறுத்தவரை, நான் - நான் தேவனுடைய வார்த்தையே சரியானது என்று விசுவாசிக்கிறேன். மேலும், நான் – நான் அது எந்த ஒரு தனிப்பட்ட வியாக்கியானத்திற்கும் உட்பட்டதல்ல என்று நான் விசுவாசிக்கிறேன். அது என்ன கூறுகிறதோ, அதுதான் சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய வார்த்தையாக இருக்கிற அதனுடைய அடிப்படைகளின் மேல் நான் அதை அந்த வகையில் ஏற்றுக்கொள்கிறேன். இப்போது, ஒருவேளை அவைகள் எல்லாவற்றையும் செயல்பாட்டில் கொண்டுவருவதற்கான போதுமான விசுவாசத்தை நான் பெறாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக, அதை செயல்படுத்துவதற்கு போதுமான விசுவாசத்தைப் பெற்றிருந்த மற்றொருவருடைய வழியில் நிற்க நான் விரும்பமாட்டேன். 14. உதாரணமாக, ஏனோக்கு, தான் மரிக்க வேண்டியதில்லை என்பதில் போதுமான விசுவாசம் கொண்டிருந்தான். அவன் மதியவேளை நடைபயணத்தை மேற்கொண்டவனாய், இங்கே இப்பூமியில் அவன் களைப்படைந்து, அப்படியே பரலோகத்திற்கு மேலேறிச் சென்றான். அப்படிப்பட்டதான விசுவாசத்தை நான் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் நிச்சயமாக விரும்புவேன். ஆனால், நாம் அவருக்குள் வளர, என்றோ ஒருநாளில் நாம் அந்த விசுவாசத்தைப் பெற்றுக் கொள்வோம் என்று நான் நம்புகிறேன். இப்போது நம்முடைய... ஆதி.5:24 15. நான் இந்த இடத்தைத் தெரிந்து கொண்டதற்கு காரணம் என்னவென்றால், என்னைப் பொறுத்த மட்டில், இன்றிரவு பாடப்பொருளுக்கான ஒரு கடினமான ஒரு பகுதியாக வேதத்தில் காணப்படும் இடங்களில் ஒன்றாக இது இருக்கிறது என்பதாக அது இங்கே காணப்படுகிறது. ஏனென்றால், தேவன் தமது சிந்தையை மாற்றிக் கொண்டார் என்பது போலிருக்கிறது. அதாவது, பிலேயாமிடத்தில் ஒரு காரியத்தை செய்யும்படி கூறுகிறார், பின்பு வேறொன்றை செய்யும்படிக் கூறுகிறார். ஆகவே, சற்று நேரத்திற்கு, நாம் அதை சற்று நீட்டிக்க முயற்சி செய்து, தேவன் மெய்யாகவே அவனிடம் என்ன கூறினார் என்பதை பார்க்கலாம் என நினைத்தேன். 16. ஆகவே இப்போது அதன் முன்னுரையாக இதை காண்போம். பிலேயாம் ஒரு – ஒரு – ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான் என்று நாம் அறிவோம், அந்த சமயத்தில் பாலாக் என்பவன் மோவாப் தேசத்தின் இராஜாவாக இருந்தான். அவர்கள் அவிசுவாசிகள் (infidels) அல்ல, அங்கு மோவாபில், இஸ்ரவேலர்கள் சேவித்த அதே தேவனையே அவர்களும் சேவித்தார்கள். ஏனென்றால் மோவாப் என்னும் தேசம் லோத்துக்கு அவனுடைய குமாரத்தி மூலமாய் பிறந்த குமாரனால் ஸ்தாபிக்கப்பட்டது; ஆகவே அவர்களும் அதே தேவனையே சேவித்தார்கள். நீங்கள் கவனிப்பீர்களே யானால், அவர்களுடைய பலிகள் மற்றும் எல்லாமுமே மிகச் சரியாக அதேவிதமாக இருந்தது, அதாவது, இரண்டாம் வருகையை பற்றிப் பேசும் காளைகள் மற்றும் செம்மறியாட்டுக் கடாக்கள் போன்றவைகள்... இப்போது அடிப்படைவாதம் ஒன்றுமட்டுமே தேவனுக்கு தேவையாயிருக்குமானால், மோவாபும் இஸ்ரவேலரைப் போலவே தங்கள் பலிகளில் அவ்வளவு அடிப்படைவாதிகளாக இருந்தனர். ஆனால், இப்போது அவர்களைப் பார்க்கும் போது, இஸ்ரவேலானது, அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு தேசத்தை நோக்கி, தேவனுடைய வார்த்தையை பின்பற்றுகிறதான வரிசையில் இருந்தனர். அவர்கள் வந்து... ஆதி.19:36,37; எண்.22:11-20 17. இங்கு மாம்சப் பிரகாரமானவைகளும், ஆவிக்குரியவைகளும் ஒன்றையொன்று சந்திப்பதன் ஒரு சாயலாக இது அமையப் பெறுகிறது. மாம்சப் பிரகாரமானவைகளும், ஆவிக்குரியவைகளும் சந்திக்கின்ற போது, எப்பொழுதுமே ஒரு மோதல் உண்டாகின்றது, ஏனென்றால், அவர்கள் ஒருவருக்கெதிராக ஒருவர் நேருக்குநேர் மோதுகின்றனர். மேலும், இங்கே இஸ்ரவேலை, ஒரு ஆவிக்குரிய சபையாக நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.. மோவாபியர்களையோ இயற்கையான (மாம்சமான) சபையாக, வெறுமனே சபை, நாம் அதை மாம்சப் பிரகாரமான சபை என்று அழைப்போம். கலா.4:22-30 18. அங்கே ஒரு – ஒரு சபையானது இருக்கிறது என்றும், அந்த சபையிலிருந்து வெளியே வருகின்றதான ஒரு மணவாட்டி அங்கே இருக்கிறாள் என்றும் நாம் அனைவரும் நிச்சயமுள்ளவர்களாய் இருக்கிறோம். அது சத்தியம் என்று நாம் அறிந்திருக்கிறோம். 19. இங்கே அவர்கள் மோதிக் கொள்கின்றனர், நாம் கவனிப்போமேயானால், இங்கு அவர்கள் மோதிக் கொண்டபோது, சற்று நேரம் நான் பேச விரும்புகிறதான ஒரு காரியத்தின் கீழாக அது வருகிறது. (ஏற்படும் நிகழ்வைக் குறித்து நான் சற்று நேரம் பேச விரும்புகிறேன்). அவர்கள் மோதிக் கொண்ட மாத்திரத்தில், ஒரு சாரார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதை மற்றவர் கண்டனர், அங்கே ஒரு மிகப்பெரிய ஆள்மாறாட்டம் காணப்பட்டது, ஒருவருக்கொருவர். 20. அங்கேதான் இன்றைக்கு நாம் அதைக் காண்கின்றோம், அதாவது, நாம் அதிகப்படியான ஆள்மாறாட்டங்களைப் பெற்றுள்ளோம், நீங்கள் அதை செய்யும்போது, நீங்கள் எப்பொழுதும் தொல்லைக்குள்ளாக இருக்கிறீர்கள், மற்றொருவனுடைய ஜீவியத்தை உங்களால் ஜீவிக்க முடியாது. நாம் வேறொன்றைப் போல நடிக்க முடியாது. நாம் என்னவாக இருக்கிறோமோ அவ்வாறாகவே இருக்க வேண்டும். இந்த நபர் ஏதோவொன்றை செய்கிறார் என்பதினால் நீங்களும் அவ்விதம் செய்ய நிச்சயம் முயற்சிக்கக் கூடாது. அவர் அவ்வாறு செய்கிறதினால், அதுபோல நீங்களும் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் அதை செய்ய வேண்டாம். தேவனுடைய பார்வையில் நீங்கள் ஒரு தனித்துவமிக்கவர், எனவே நாம் ஒருவரைப் போல மற்றொருவர் ஆள்மாறாட்டம் செய்ய நிச்சயம் முயற்சிக்கக் கூடாது. 21. மேலும் இப்பொழுது இஸ்ரவேலர்கள், சரியாக கடமையின் பாதையில், தேவனுடைய கட்டளையின்படி, கட்டளையாகிய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு தேசத்தை நோக்கி, தாங்கள் அணிவகுத்து சென்ற வழியிலே, அவர்கள் மோவாப் என்னும் இன்னொரு குழுவினராகிய விசுவாசிகளோடு மோதினார்கள். 22. இது மிகவும் மோசமான ஒன்றாக அமையவில்லை என்று நான் நம்புகிறேன். ஆனால், நான் இங்கே அளிக்க விரும்புகிற ஒரு சிறிய விளக்கம் என்னவெனில், மோவாப், ஒரு தேசத்தில் வாசம் செய்கிறவன் என்ற நிலையில், அவன் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சூழலை கொண்டிருந்தவனாய்க் காணப்பட்டான். பிரபலமானவர்களையும், அவனுடைய –அவனுடைய இராஜ்ஜியத்தினுடைய மரியாதைக்கு உரியவர்களையும் அவன் பெற்றிருந்தான். எண்.22:15-16 23. ஆனால் இஸ்ரவேலர்களோ ஒரு – ஒரு அலைந்து திரிகிறவர்களாக காணப்பட்டார்கள். அவர்கள் சென்றதான இடம் என்று குறிப்பிடும்படிக்கு அவர்கள் எதையும் பெற்றிருக்கவில்லை. கர்த்தர் அவர்களை நடத்துகிற போக்கிலே போனார்கள் (just wandered). இப்பொழுது, நான் விசுவாசிக்கிறேன், பிலேயாமும் கூட, தன்னுடைய தீர்க்கதரிசனத்தின் பிற்பகுதியில், “அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாதிருப்பார்கள். அது சிதறடிக்கப்பட்டதாயிருக்கும்” என்று கூறினான். அது எப்போதும் அந்தவிதமாகவே இருந்து வருகிறது. பின்னர், நாம் காண்பது, அங்கே மோதல் உண்டாகிறது. எண்.23:9 24. சரியாக காயீனும் ஆபேலும் போலவே, அவர்களும் ஒரு மோதலில் கூடிவந்தார்கள். அவர்கள் சகோதரர்களாய் இருந்து, ஏவாள் என்னும் ஒரே தாயின் மூலம் பிறந்தவர்களாய் இருந்தனர். தாங்கள் அழிவிற்குரியவர்கள் என்பதையும், ஜீவனுக்கு புறம்பாக்கப்பட்டு, ஜீவ தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் என்று நாம் காண்கிறோம். மறுபடியும் அங்கே சென்றடைவதற்கு இரண்டு பேருமே ஒரு வழியை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். நீங்கள் கவனிப்பீர்களேயானால், இரண்டு பையன்களுமே அதிகமான பக்தி வைராக்கியம் கொண்டவர்கள். ஆபேல் எவ்வாறு பக்தி வைராக்கியம் உள்ளவனோ, அதுபோல காயீனும் பக்தி வைராக்கியம் உள்ளவனாக இருந்தான். இரண்டு பேருமே பலிபீடம் கட்டினார்கள். வேறுவகையில் கூறினால், ஒரு சபையை கட்டினார்கள். இரண்டு பேருமே பலி செலுத்தினார்கள். இரண்டு பேருமே ஜெபம் செய்தார்கள். அவர்கள் – அவர்கள் இரண்டு பேருமே தேவனை சேவித்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவன் அவரை தவறான முறையில் சேவித்தான். ஆதி.4:3-8 25. இப்பொழுது, நீங்கள் பாருங்கள், நீங்கள் எப்போதும் மிகவும் உத்தமமாய் இருப்பீர்கள், இருப்பினும் தவறாய் இருப்பீர்கள். “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” நீதி.14:12, நீதி.16:25 26. இப்பொழுது, காயீன் மற்றும் ஆபேலுடைய விஷயத்தில் இது மிகவும் சரியாக இருந்தது என்று நாம் –நாம் காண்கிறோம். அவர்கள் பார்த்த போது... ஆபேலுடைய பலி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை காயீன் பார்த்தான். தேவன் ஏன் அவனுடைய பலியை ஏற்றுக் கொண்டார்? என்பதைக் கூற நான் சற்று இங்கே நிறுத்தட்டும். அது என்னவென்றால் – அவன்... வெளிப்பாட்டின் மூலமாக, அது ஆப்பிள் பழங்கள் அல்ல என்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான். மாதுளைப் பழங்கள் அல்லது அதைப் போன்ற ஒன்று என்று நான் நினைக்கிறேன், இப்பொழுது, ஏதேன் தோட்டத்தில் அவர்கள் புசித்தது அதுதான் என்றும், பாவத்தை ஏற்படுத்தியது அதுதான் என்றும் அவர்கள் கருதுகின்றனர். அவன் ஆதாமை கண்டான்... அல்லது, நான் கூறவிழைவது என்னவெனில், அது இரத்தமே என்று ஆபேல் விசுவாசித்தான்.. உண்மையிலேயே அதுவேதான். மேலும் ஆபேல், வெளிப்பாட்டின் மூலமாக, விசுவாசத்தினாலே, காயீனைக் காட்டிலும் மிகவும் சிறந்த பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதன் மூலமாக தேவனும் அவன் நீதிமான் என்று சாட்சிகொடுத்தார். பாருங்கள்? தேவனுடைய வார்த்தையினுடைய ஒரு தெய்வீக வெளிப்பாட்டின் பேரில் முழு சபையும் கட்டப்பட்டிருக்கிறது. முழு... எபி.11:4 27. அவ்வாறுதான் இயேசுவும் கூறினார். ஒருநாள், மலையிலிருந்து இறங்கி வந்த போது, அவர் தம்முடைய சீஷர்களிடத்தில், “மனுஷகுமாரனாகிய என்னை நீங்கள் யாரென்று சொல்லுகிறீர்கள்? ஜனங்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார். 28. “அவர்களில் சிலர், நல்லது, உம்மை “மோசே” என்று கூறுகிறார்கள், சிலர் உம்மை “எலியா” என்று கூறுகிறார்கள், அல்லது “தீர்க்கதரிசிகளில் ஒருவர்” என்று கூறுகிறார்கள்” என்றனர். அதற்கு அவர், “ஆனால், நீங்கள் என்னை யார் என்று கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். 29. அப்பொழுது பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்ற ஒரு மகத்தான அறிக்கையை கொடுத்தான். 30. அதற்கு அவர், “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்” என்றார். இங்கேதான் விசுவாசிகளுக்குள் பெரிய தர்க்கம் நடக்கிறது. 31. இப்பொழுது கத்தோலிக்க சபையானது, “அங்கே அவர் – அவர் அவருடைய சபையை பேதுரு மேல் கட்டினார், ஏனென்றால் அவர், ‘நீ பேதுருவாய் இருக்கிறாய், சிறிய கல், இந்தக் கல்லின் மேல், இந்த சிறிய கல்லின் மேல், நான் என்னுடைய சபையைக் கட்டுவேன்’ என்று கூறினார்” என்கிறது. 32. நல்லது, இப்பொழுது, புராட்டஸ்டன்ட் (Protestant) சபையானது, அது அவர் மீதே கட்டப்பட்டது, மூலைக்கல்லாகிய அவர் மீதே கட்டப்பட்டது என்று பெரும்பாலும் விசுவாசிக்கிறது. ஆனால், கட்டிடத்தின் மூலைக்கல்லே அவர்தான் என்று நீங்கள் காண்கிறீர்கள், எதன் மீது அவர் தமது சபையைக் கட்டினார் என்று நான் விசுவாசிப்பது... ஏசா.28:16, எபே.2:20, 1-பேது.2:6 33. வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் நீங்கள் பாருங்கள், கேள்வி என்னவென்றால் என்னை யார் என்று மனிதன் கூறுகிறான் என்பதே. 34. பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். 35. அதற்கு அவர் “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை ஒருபோதும் உனக்கு வெளிப்படுத்தவில்லை. ஒரு வேதாகம சாலைக்குச் சென்று இதை ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை. மனிதர்களால் உண்டாக்கப்படும் கோட்பாடுகளினால் நீ இதை ஒருபோதும் கற்றதில்லை. ஆனால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார்.” பாருங்கள்? “இந்தக் கல்லின் மீது என் சபையை கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள முடியாது” என்றார். வார்த்தையாய் இருக்கிற இயேசு கிறிஸ்துவைப் பற்றியதான ஆவிக்குரிய வெளிப்பாடு! அப்படியானால் அது, வார்தையைப் பற்றி ஆவிக்குரிய விதத்தில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியமாயிருக்கிறது. மிகச்சரியாக அங்கேதான் சபையானது இளைப்பாறுகிறது. மத்.16:13-19; மாற்.8:27-30; லூக்.9:18-21 36. தொடக்கத்தில் ஆபேல், அது வயல்வெளியின் பழமாக இருக்க முடியாது அல்லது நம்முடைய கரங்களின் கிரியையாகவும் இருக்க முடியாது அல்லது அதுபோன்ற எதுவும் கிடையாது என்கிற ஆவிக்குரிய வெளிப்பாட்டை பெற்றிருந்தான் என்று நான் நினைக்கிறேன். அது இரத்தமாக இருந்தது. ஆகவே, காயீனைக் காட்டிலும் ஆபேல் மிகச் சிறந்த பலியைத் தேவனுக்குச் செலுத்தினான். 37. அதேக் காரியத்தை ஆபிரகாம் மற்றும் லோத்தினிடத்தில் காண்கிறோம் – தெரிந்துகொள்ளுதல் என்னும் விஷயத்தில், ஏனென்றால் லோத்து கீழான பகுதிக்குச் சென்றான். அந்த நேரம் வந்தபோது, ஆவிக்குரியதற்கும் பாரம்பரிய சபைக்கும் மோதல் உண்டானபோது, மந்தை மேய்ப்பர்களால் அது உண்டானபோது, ஒருவருக்காக மற்றொருவர் பிரிந்துபோக வேண்டியதாயிற்று. இவ்வாறு நிகழும்போதெல்லாம் அது பொறாமையைத் தோற்றுவிக்கிறது. ஆதி.13:7-11 38. ஆபேலின் காரியத்தில், தேவன் அவனை ஏற்றுக் கொண்டார், காயீனுடைய மிகப்பெரிய, அழகுவாய்ந்த பலியை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்காக காயீன் கடினமாக உழைத்தான். மிகவும் பக்தியுள்ளவனாக, பணிந்து ஆராதனை செய்தான். ஆபேல் செய்தது போலவே எல்லாவற்றையும் செய்தான், சத்தியம் என்ன என்பதைக் குறித்த வெளிப்பாட்டை மாத்திரம் அவன் பெறாதவனாயிருந்தான்... ஆகவே நாம் பார்க்கிறோம், தேவன் ஆபேலின் வெளிப்பாட்டையும் அவனுடைய பலியையும் அங்கீகரித்தபோது, அது காயினுக்கு ஆபேல் மீது பொறாமையை ஏற்படுத்தியது, அதனால் அங்கே முதல் கொலை நடந்தது. 39. ஆபிரகாமின் மந்தை மேய்ப்பர்களுக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பர்களுக்கும் இடையே அது பொறாமையாக மாறினது என்று நாம் காண்கிறோம், அதனால் அவர்கள் பிரிய வேண்டியதாயிற்று. அதுபோலவே, மோசேக்கும் கோராகு என்பவனுக்கும் மோதல் உண்டாயிற்று. இயேசுவுக்கும் யூதாசுக்கும் ஒரு மோதல் உண்டாயிற்று. எண்.16:1-2 40. மேலும் எப்பொழுதுமே அதே காரியமாகவே அது இருந்து வருகிறது, இன்றைக்கும் கூட அவ்விதமே இருக்கிறது, மாம்சப் பிரகாரமான சபையும் ஆவிக்குரிய சபையும் ஒன்றாய் கூடுகிற நேரத்தில் மோதல் ஏற்படுகிறது. இப்பொழுது, மாம்சமானது ஆவிக்குரியதற்கு இணையாகும்படி, எப்பொழுதுமே ஒரு மாம்சப் பிரகாரமான ஆள்மாறாட்டத்தைக் கொண்டு அதை முயற்சி செய்கிறது. ஆனால், யாக்கோபு மற்றும் ஏசா விஷயத்தில் நடந்தது போலவே அது கிரியை செய்யாது. 41. தேவன் தம்முடைய சபையை அழைத்தார், பெயரிட்டார், தனிமைப்படுத்தினார். ஒவ்வொரு முறையும், அவள் ஜீவியம் செய்கின்ற அந்த காலத்தில், அவர் தம்மையே அவளுக்கு வெளிப்படுத்துவார். சரியாக ரோமர் 8-ஆம் அதிகாரத்தில் அவர் கூறினபடி, தேவனுடைய முன்னறிதல் அல்லது முன்குறித்தலானது நிச்சயம் நிலை நிற்கும். காயீன்... அல்லது நான் கருதுவது... 42. ஏசா மற்றும் யாக்கோபு, இருவரும் பிறக்காததற்கு முன்பே, அவர்கள் தங்கள் தெரிந்துகொள்ளுதலை செய்வதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு முன்னரே, தேவன், “நான் யாக்கோபை சிநேகித்து ஏசாவை வெறுத்தேன்” என்றார். ஏனென்றால் ஆதியிலிருந்தே அவர்களுக்குள் என்ன இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். மேலும் நாம் அறிகிறோம்... ரோம.8:29&9:13 43. உங்கள் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்பதை மனதில் வைத்துக் கொளுங்கள். உங்களுடைய நோக்கம் என்ன என்பதை அவர் அறிந்திருக்கிறார். நாம் என்ன கூறுகிறோம் என்பதல்ல, உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார். சங்.139:1-2 44. அது எப்பொழுதுமே பிரச்சினையை உருவாக்குகிறது. மேலும் அவர்கள்... மாம்ச சபையானது எப்பொழுதும் முயற்சி செய்து வருகிறது, காயீன் ஆபேலை அழித்த காலம் தொடங்கி, மாம்ச சபையானது எப்பொழுதும் ஆவிக்குரிய செயல்பாடுகளை அழிக்கவே முயற்சித்துக் கொண்டிருகிறது. இன்றும்கூட நாம் அதேக் காரியத்தைக் காண்கிறோம். இன்றைக்கும் மிகச் சரியாக அதேக் காரியம்தான். அது சாத்தானிடமிருந்து வருகிறது என்பதை அது நிரூபிக்கிறது. ஏனென்றால் அது பொறாமையாகவும், சத்தியத்தை பாவனை செய்கிறதாயும் இருக்கிறது. 2-தீமோ.3:1-5 45. ஆகவே, தேவன் தாம் என்ன கூறினாரோ, அதைப் பற்றியதான தம்முடைய சிந்தையை ஒருபோதும் மாற்றிக் கொள்ளமாட்டார் என்பதை நாம் மெய்யாகவே விசுவாசிக்கிறோம். எப்பொழுதும் அதை மெய்யானதாக காத்துக் கொள்கிறார். 46. ஆனால், அவர் ஒரு அனுமதிக்கும் சித்தத்தையும் கொண்டவராக இருக்கிறார். இப்பொழுது, அங்கேதான் தொல்லையானது இருக்கிறது. நாம் தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தையே செயல்படுத்த முயற்சி செய்கிறோம், அவரும் அதை அனுமதிப்பார். ஆனால் அதே சமயம் நாம் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தை எடுத்துக் கொள்வோமேயானால், அது தவறாயிருப்பினும், தம்முடைய பரிபூரண சித்தத்தை மகிமைப் படுத்தும்படியாக, அவர் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தையும் நிகழ்ந்தேறும்படி அனுமதிப்பார். 47. தேவன் உடனிருக்க, எதுவும் தவறாகப் போய்விட முடியாது. நாம்.... இன்றிரவில், கடிகாரம் எதை சுட்டிக் காண்பித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார் (where the clock is ticking at). அதில் தவறானது எதுவும் இல்லை. ஒவ்வொரு அசைவும் அது இருக்க வேண்டிய விதத்தில் சரியாக அடித்துக் கொண்டிருக்கிறது, அனைத்தும் சரியாக. அது தவறு என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அது சரியே என்று அவர் அறிந்திருக்கிறார். அது அந்த விதமாகத்தான் இருந்தாக வேண்டும். 48. தொடக்கத்தில் இருந்தது போலவே, தேவன் பாவம் பிரவேசிக்க அனுமதித்தார். அவர் அதைச் செய்யவில்லை, இல்லை. அது அவருடைய பரிபூரண சித்தமாக இல்லை... 49. ஆனால் நீங்கள் கவனியுங்கள், தேவன், மகத்தான ஆவியானவர், பிதாவாகிய அவருக்குள் தன்மைகள் காணப்பட்டன. இப்பொழுது நீங்கள் காண்கிற காரியங்களானது, அவருடைய தன்மைகளின் காட்சிப்படுத்துதலே ஆகும். அவர் தனிமையில் வாசம் செய்தார், அப்பொழுது அவர் தேவனாகக்கூட இல்லை; தேவன் எனப்படுவது தொழுகைக்குரிய ஒன்றாகும். அவர் மகத்தான நித்தியமான ஒருவர். அவருக்குள் பிதாவாயிருக்கும் தன்மை, இரட்சகராக இருக்கும் தன்மை, சுகமாக்குகின்ற தன்மை போன்ற தன்மைகள் காணப்பட்டன. மேலும் இப்பொழுது, முதலாவது எப்படி அவரால்... அவர் பிதாவாக இருக்க வேண்டியிருந்தது, ஏனென்றால், அவர் பிதாவாக இருந்தார் என்பதை அது நிரூபிக்கிறது. ஆனால் அவர் தனிமையில் இருக்கிறார். அவர் ஒருவரே சாவாமையுள்ளவர். மேலும், இப்போது, அவருடைய பண்புகள் அனைத்தும் வெளிக்காட்டப்பட வேண்டும். 50. இப்போது இரட்சகராக இருப்பதற்கு, அங்கே ஏதோ ஒன்று இழக்கப்பட்டிருக்க வேண்டும். தேவன் வேண்டுமென்றே ஒன்றை இழந்து, பின்னர் அதை மீட்டுக் கொள்ளமுடியாது. அது அவருடைய பரிசுத்தத்திற்கும், அவருடைய மகத்தான நியாயத்தீர்ப்பிற்கும் உகந்தது அல்ல. ஆனால் அவர், மனிதன் விழுந்து போய்விடுவான் என்பதை அறிந்தவராய், தெரிந்து கொள்ளும் விஷயத்தில் அவனை சுயாதீனமுள்ளவனாக வைத்தார். பின்னர், அதில், அவரே மனிதனாக ஆனார். விழுந்துபோன மனிதனை மீட்பதற்காக தாமே மனிதனாக ஆனார். அதன் காரணமாகவே, இயேசு இம்மானுவேலாக இருந்தார். அவருக்கு பதிலாக, தேவன் வேறு ஒரு மனிதனை அனுப்பியிருந்தால் அது நீதியாக எண்ணப்படாது. தேவனே வந்து அந்த இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. மேலும், தேவன், ஆவியின் ரூபத்தில் கீழே இறங்கி வந்து, அந்த இடத்தை எடுத்துக் கொள்ளமுடியாது, அவர் மாம்சமாக ஆக்கப்படவேண்டும், அவருடைய சொந்த சிருஷ்டிக்கப்பட்ட குமாரனாக மாம்சத்தில் வரவேண்டும். மத்.1:23 51. இங்கே தொடக்கத்தில், மனிதனை, பூமியின் தூளில் இருந்து உருவாக்க வேண்டும் என்பது அவருடைய பரிபூரண சித்தமாக இருந்தது என்பதை காண்பித்தார். ஆனால், நீங்கள் பாருங்கள், அவர் பாலுணர்ச்சி உள்ளேவர அனுமதித்தார். பிள்ளைகள் பாலுணர்வின் மூலமாக பிறக்க வேண்டும் என்பது ஒருபோதும் அவருடைய நோக்கமாக இருக்கவில்லை, ஆனால் அது அனுமதிக்கப்பட்டது, அது வெகுசீக்கிரத்தில் மறைந்து போய்விடும். ஆதி.2:7 52. இப்போது, மோவாபியர்கள் தொடக்கத்தில் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று கண்டோம், ஏனென்றால் அது லோத்தின் குமாரனாக இருந்தது, அவனுடைய (லோத்தின்) சொந்த குமாரத்தி மூலமாகப் பிறந்தபிள்ளை. இப்போது கவனியுங்கள், மோவாபியர்கள் பாரம்பரிய சபையை பிரதிபலிக்கின்றனர், மோவாப் பிரதிபலிக்கிறான். இஸ்ரவேலரோ ஆவிக்குரிய சபையை பிரதிபலிக்கின்றனர். இப்போது இஸ்ரவேலானது, வெளியே அழைக்கப்பட்ட மணவாட்டியை பிரதிபலிக்கிறது. 53. சபை என்ற பதத்திற்கு “வெளியே அழைக்கப்பட்ட ஒன்று – வெளியே வா” என்று பொருளாகும். சபை என்பதே வெளியே வந்தவர்கள் என்பதாகும். கர்த்தர் கூறினதாவது: “என் ஜனங்களே! அவளை விட்டு வெளியே வாருங்கள், உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள், உங்களை என்னிடமாய் சேர்த்துக் கொள்வேன். அவர்களுடைய அருவருப்புகளைத் தொடாதிருப்பீர்களாக.” தேவனுடைய சபையானது உலகத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டுள்ளது. குழப்பம் நிறைந்த உலகத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டுள்ளது. இனி ஒருபோதும் நீங்கள் உலகத்திற்குரியவர்கள் அல்ல. 2-கொரி.6:17 54. அன்றொரு நாள் இரவில் நான் உங்களுக்குச் சொல்ல முயற்சித்தது போல, நீங்கள் சரியாக இப்பொழுதே உங்கள் – உங்களுடைய நித்திய மீட்பின் அச்சாரத்தை, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக அதை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது, அது ஏற்கனவே உங்களை உயிர்ப்பித்துவிட்டது. இப்போது நீங்கள் அவருடன்கூட உயிர்தெழுந்துவிட்டீர்கள், நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் வாசமாயிருக்கிறோம். பாருங்கள், நீங்கள் ஒருபோதும் உலகத்திற்குரியவர்கள் அல்ல, நீங்கள் உலகத்தை சிநேகித்தால், உங்களுடைய அன்பு இன்னுமாக உலகத்தின் பொருட்களில் பற்றுடையதாக இருந்தால், தேவனுடைய அன்பு உங்களுக்குள் சிறிதளவும் இல்லை. பாருங்கள்? நாம் உலகத்திலிருந்து விடுபட்டிருக்கிறோம். இச்சை என்பது இனி கிடையாது. 1-யோ.2:15; எபே.2:6,7&4:30 55. எபிரெயர் நிருபத்தில், 10-ஆம் அதிகாரம் என்று நம்புகிறேன் – “ஒவ்வொரு வருடமும் பாவத்தைக் குறித்ததான நினைவுகூறுதல் தொடர்ந்து காணப்பட்டது, அந்த மிருகங்களின் உடல்களானது பலியிடப்பட்டது. ஆராதனை செய்கிறவர் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருக்கும், பாவம் செய்வதற்கான வாஞ்சையே இல்லாதிருக்கும்.” உங்களிடமிருந்து அனைத்துமே போய்விட்டிருக்கும், ஏனென்றால், ஒரு புதிய ஜீவனுக்கென்று உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். எபி. 10:2 56. அப்படியானால், பாரம்பரிய சபை என்பது ஸ்தாபனங்களில் சேர்ந்துகொண்ட ஒரு கூட்ட ஜனங்களே. அது ஒருபோதும்... அதை நான் “சபை” என்றுகூட அழைப்பதில்லை. நான் அதை அவ்விதம் குறிப்பிட விரும்பவில்லை. அதை ஒரு தங்கும் விடுதி என்றே குறிப்பிட விரும்புகிறேன், மெத்தஸ்டிஸ்ட் விடுதி, பாப்டிஸ்ட் விடுதி, பெந்தெகொஸ்தே விடுதி என்று குறிப்பிட விரும்புகிறேன். 57. ஆனால், சபை என்பது மறுபடி – பிறந்ததாகும், அது கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறது, அது புதுசிருஷ்டிப்பாய் இருக்கிறது. ஆகவே, இப்போதும் பார்க்கிறோம், தேவன் அவருடைய வார்த்தையை காக்கிறவராக இருக்கிறார். 58. இப்போது மோவாப் பார்க்கிறான், மோவாப் கீழே பரந்த நிலப்பரப்பைக் காண்கிறான், தேவன் அந்த ஜனங்கள் மத்தியில் அசைவதைப் பார்த்தான், அவர்கள் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட தேசமாகக்கூட காணப்படவில்லை. அவர்கள் இடம் விட்டு இடம் மாறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வினோதமான காரியம் என்னவென்றால், அவர்கள் இந்த தேசங்கள் மேல் வந்தார்கள், அவர்கள் அவைகளை எடுத்துக் கொண்டார்கள். ஒவ்வொன்றும் அவர்களின் பாதையில் இருந்தது, அவர்கள் அவைகளை எடுத்துக் கொண்டார்கள். இப்பொழுது, அவர்கள் கண்டது, அதாவது மோவாபியன் அதை நோக்கிப் பார்க்கிறான், பாலாக், கீழே இஸ்ரவேல் தேசத்தைப் பார்த்தான், அவன் “ஜனக்கூட்டம் பூமியின் விசாலத்தை மூடிவிட்டது” என்றான். அவன் “மாடு வெளியின் புல்லை மேய்கிறது போல, இப்பொழுது, இந்த கூட்டம் நம்மை சுற்றியிருக்கின்ற யாவையும் மேய்ந்துபோடும்” என்றான். 59. அவர்களுக்குள் ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்பதைக் கண்டுபிடித்தார்கள், எவ்வாறு அவர்களுக்கு இந்த வெளிப்பாடு கிடைத்தது என்பது முக்கியமான குறிப்புகளில் ஒன்றாக இருந்தது. அவர்கள் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டிருந்தனர், இப்போது யாரோ ஒருவர் அவர்களை வழிநடத்தினார். தனது பிரதிநிதிகள் அல்லது தனது முக்கிய பிரமுகர்களைக் கொண்ட வழக்கமான ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட அமைப்பாக அது காணப்படவில்லை, ஆனால் அவர்கள் ஒரு – ஒரு வழிநடத்துபவரை, ஒரு தெய்வீக – அழைப்பைப் பெற்ற ஒரு வழிநடத்துபவரை கொண்டிருந்தார்கள். 60. மேலும் ஓ, அது எத்தகைய ஒரு துக்கமான நாளாக இருந்தது! சபை உலகமானது பரிசுத்த ஆவியானவரின் தெய்வீக வழி நடத்துத்தலை விட்டுவிட்டு, ஒரு ஆயரையோ அல்லது வேறு ஏதோ ஒன்றையோ அந்த ஸ்தானத்தை வகிக்கும்படி தெரிந்து கொள்கிறது. அது ஒரு துக்க நாளாக இருந்தது. பரிசுத்த ஆவியானவரே சபையின் தலைவராக இருத்தல் வேண்டும். இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் சத்தியம் என்று உறுதிப்படுத்துவதற்காக அவர் அனுப்பப்பட்டுள்ளார், சபையானது தொடக்கக் காலத்தில் ஜீவித்தது போல, சபையை ஜீவிக்கச் செய்யவும் அவர் அனுப்பப்பட்டுள்ளார். 61. சிறிது காலத்திற்கு முன்பு, இங்கே மிகவும் பெயர் பெற்ற ஒரு பள்ளி இந்த பட்டணத்தில் இருந்தது, ஒரு வேதாகமப் பாடசாலை இருந்தது. ஃபீனிக்ஸிலும் ஒரு பாடசாலையை கொண்டிருந்தார்கள். மேலும் அவர்களில் ஒரு மனிதன், அல்லது மாணவர்களில் இரண்டு பேர் என்னிடத்தில் வந்து, “நாங்கள் உம்மை விரும்புகிறோம், சகோதரன் பிரன்ஹாமே, உமக்கு விரோதமாக எங்களிடத்தில் ஒன்றுமில்லை, ஒன்றுமே இல்லை, ஆனால் உம்மை சற்றே சீர்படுத்த, சரிசெய்ய விரும்புகிறோம்” என்று கூறினார்கள். 62. அதற்கு நான், “நல்லது, நான் உண்மையிலேயே, நிச்சயமாக சீர்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினேன். ஆகவே மேலும், “நான் தவறாயிருக்கிறேன் என்றால், நான் நிச்சயமாக தவறாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை; நான் அதிகப்படியான ஜனங்களுடன் பேசுவதுண்டு” என்று கூறினேன். 63. அதற்கு அவர், “நல்லது, உங்களுடைய பிரச்சினை இங்குதான் இருக்கிறது” என்றார். தொடர்ந்து அவர், “நீங்கள் ஒரு அப்போஸ்தல மார்க்கத்தை [வழியை] அறிமுகப்படுத்த முயற்சித்து, அல்லது அதை மறுபடியும் உயிர்ப்பிக்க முயற்சி செய்கிறீர்கள்” என்று கூறினார். அதற்கு நான், “ஆம் ஐயா” என்றேன். மேலும், “நல்லது, இப்போது அப்படியானால்...” என்று கூறினேன். அவர், “இப்போது அதைக் குறித்து தர்க்கம் செய்யப் போவதில்லை” என்றார். 64. நான், “நானும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை, நாம் அவ்வாறு தர்க்கம் செய்யக்கூடாது. நாம் சகோதரர்களாயிருக்கிறோம்” என்று கூறினேன். அப்பொழுது அவர், “நல்லது,” என்றும் அவர், “நான் உங்களுக்கு சிறிது உதவி செய்யப்போகிறேன்” என்று கூறினார். அதற்கு நான், “நிச்சயமாக நான் உதவியைப் பெற்றுக் கொள்ள விருப்பமாயிருக்கிறேன்” என்றேன். மேலும் அவர் “இப்போது நீங்கள் பாருங்கள்” என்றும் பின்னும் அவர் “இப்போது அந்த... அதுவே உண்மை” என்று கூறினார். 65. மேலும் நான், “இப்போது பேசும் போது, நாம் பாட புத்தகத்தை பயன்படுத்தக்கூடாது” என்றேன். நான் “என்னுடையதையும் நான் பயன்படுத்தமாட்டேன்” என்றேன். இதைத் தவிர வேறொன்றையும் நான் கொண்டிருக்கவில்லை. ஆகவே – ஆகவே நான், “நான் எந்த பாடபுத்தகத்தையும் பயன்படுத்த மாட்டேன், பரிசுத்த வேதாகமம் மட்டுமே. மேலும் நீங்களும்கூட, நாம் பரிசுத்த வேதாகமத்தை மாத்திரம் பயன்படுத்துவோம்” என்று கூறினேன். அவர், “சரி” என்று சொன்னார். 66. நான், “இப்போது, அப்போஸ்தல சபையானது பெந்தெகொஸ்தே நாளன்று தொடங்கப்பட்டது என்று நாம் விசுவாசிக்கிறோம். அதை ஒத்துக்கொள்கிறீர்களா?” என்று கேட்டேன். அவர், “ஆம், நான் அதை விசுவாசிக்கிறேன்” என்றார். 67. நான், "இப்போது, இப்படிப்பட்ட அப்போஸ்தல அசைவுகளுக்காக, தேவன் அங்கே சபைக்கு அதிகாரத்தை கொடுத்தார் என்று உணர்ந்து கொள்கிறோம்” என்று கூறினேன். 68. அவர், “ஆம், அது சபையின் கட்டமைப்பாக இருந்தது. இப்போது, சபையானது ஏற்கனவே அதின் ஒழுங்கில் நிறுத்தப்பட்டுவிட்டது, நாம் அனைவரும் நம்முடைய மேய்ப்பர்களைக் கொண்டுள்ளோம், நம்முடைய பெரிய ஸ்தாபனங்கள் மற்றும் அநேகக் காரியங்களை நாம் கொண்டுள்ளோம், ஜனங்களைக் கவர்ந்து இழுப்பதற்கு அந்தக் காரியங்கள் எதுவும் நமக்கு தேவையில்லை” என்றார். 69. நான், “இப்போது அதை பரிசுத்த வேதாகமம் எங்கே கூறுகிறது?” என்று கேட்டேன். நான், “எந்த இடத்தில் பரிசுத்த வேதாகமம் அதைக் கூறுகிறது எனக்கு சொல்லுங்கள்” என்று கேட்டேன். பாருங்கள்? அதற்கு அவர், “நல்லது, அதை அவ்விதமாக, அது மிகச்சரியாக கூறவில்லை” என்றார். 70. நான், “நல்லது அப்படியானால், அது அவ்விதமாக கூறாத பட்சத்தில் அதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன், பாருங்கள். பாருங்கள்? நாம்... அது அந்த விதமாகத்தான் இருக்கவேண்டும். இன்னும் தேவன் ஜனங்களை அழைக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம் ஐயா” என்றார். 71. நான், “இப்போது நீங்கள் பரிசுத்த வேதாகமம் சரியானது என்று விசுவாசிப்பீர்கள். ஒவ்வொரு பதிலையும் கூட” என்றேன். “ஆம்.” 72. மேலும் நான், “இப்போது பெந்தெகொஸ்தே தினத்தன்று பேசினவர் பேதுருவாக இருந்தார், இராஜ்யத்தின் திறவுகோலை அவர் கொண்டிருந்தார்” என்றேன். “அது சரியே.” 73. மேலும் நான், “இப்போது அவருடைய தீர்மானம் என்னவாக இருந்தாலும்... இயேசு ‘பூமியில் எதைக் கட்டுவீர்களோ, நான் அதை பரலோகத்தில் கட்டுவேன்: பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ அதை நான் பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன்’ என்று கூறினார்” என்றேன். அவர், “அதை நான் விசுவாசிப்பேன்” என்றார். மத்.16:19 74. நான், “இப்போது அப்போஸ்தல நடபடிகளின் புஸ்தகம் 2-ஆம் அதிகாரம் 38-வது வசனத்தில், அந்நியபாஷையில் பேசிக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்து ஆச்சரியமுற்ற அந்த ஜனங்கள், ‘இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டபோது பேதுரு அவர்களிடம், ‘நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது’ என்று கூறினான். இப்பொழுது, தேவன் இன்னமும் அழைத்துக் கொண்டிருப்பாரானால், இவர்களுக்கும் அதே வாக்குத்தத்தம் உரித்தாக இருக்கிறது” என்றேன். அப்.2:38-40 75. நல்லது, அவர் இங்கு வருகிறார், பில்லி கிரஹாம் குழுவினரின் ஒரு குழுவோடு இங்கே ஒரு கூட்டத்திற்காக ஜெபிக்கிறார்கள். அந்தக் குழுவினருள் ஒரு குழுவினர் கலிஃபோர்னியாவிலோ அல்லது வேறு எங்கோ ஓரிடத்தில், ஒரு சில வாரங்களுக்கு முன்பு, உண்மையாகவே ஆழமான, உத்தமமான ஜெபத்தைச் செய்தனர், தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்தும் உபவாசித்தும் இருக்கையில், அந்த முழுக்கூட்டத்தார் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார், அவர்கள் அந்நியபாஷையில் பேசத் தொடங்கினார்கள். மேலும்... ஊ-ஹஹ். 76. இப்போது, அரிசோனா, டூஸானிலுள்ள அசம்பிளீஸ் ஆப் காட் சபை, நட்பு சபையின் (Friendly church) ஒரு அங்கத்தினராக அவர் இருக்கிறார். அவர், “ஓ! சகோ. பிரன்ஹாமே, நான் அங்கு சென்று, மிகவும் நல்ல உணர்வுகளைப் பெறுகிறேன்” என்றார். மேலும் அவர், “என் கரங்களை அப்படியே உயர்த்தி, தேவனுடைய மகிமை! என்று நான் பாடினேன்” என்றார். மேலும் அவர், “புதிய ஏற்பாடு பாப்டிஸ்ட் சபையில் என்னால் ஒருபோதும் அதை செய்ய முடியவில்லை” என்று கூறினார். அப்பொழுது நான், “உங்களால் முடியாது என்று நான் காண்கிறேன். அதனால்தான் நீங்கள் வெளியேறினீர்கள்” என்றேன். ஆம். 77. ஆகவே பாருங்கள், நீங்கள் அங்கேதான் இருக்கிறீர்கள், தேவன் அவருடைய வார்த்தையைக் காக்கிறார். அவர் என்ன கூறினாரோ, அவர் அதைச் செய்வார். தேவன் அவருடைய வார்த்தையைக் காக்க வேண்டியவராயிருக்கிறார். 78. இப்போது, மோவாப் பெற்றிருந்த மாம்சப் பிரகாரமான ஆள்மாறாட்டத்தை இங்கே நாம் காண்கிறோம். அவன் இந்தத் தீர்க்கதரிசியை இஸ்ரவேலருக்குள் பார்த்தான், அந்தத் தீர்க்கதரிசியால் ஆசிர்வதிக்க முடியும், சபிக்கவும் முடியும், அதுபோன்ற பிறவற்றையும் செய்ய முடியும், வழிநடத்தவும் முடியும். ஆகவே அரசியல் மூலமாக அதை பொருந்தக்கூடிய அளவிற்கு அவன் முயற்சி செய்கிறான். 79. இப்போது, சரியாக அதேக் காரியங்கள் தான் இந்நாட்களில் சபைகளில் நடக்கிறது. ஒருவகையான அமைப்புகளுடன் அதை பொருத்தும்படி அவர்கள் முயற்சி செய்தார்கள். உங்களால் அதைச் செய்ய முடியாது. 80. சபையை, அது வாழ்கிற காலத்தில் வழி நடத்தி, அந்தக் காலத்திற்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை உறுதிப்படுத்த, எப்பொழுதுமே பரிசுத்த ஆவியானவர் சபையில் ஜீவித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆதியிலிருந்தே, இந்தக் காலத்திற்கென்று இவ்வளவு என்றும், அந்தக் காலத்திற்கென்று இவ்வளவு என்றும், அவர்கள் காலத்திற்கென்று இவ்வளவு என்பதாக தேவன் வார்த்தையை உரைத்தார். அது எப்பொழுதும் அவ்விதமே நிகழ்கிறது. மேலும், பாருங்கள், இந்த சபையை அதனுடைய நாளில் ஜீவிக்க செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் சபையில் ஜீவிக்கிறவராக இருந்தாக வேண்டும் கடைசி-நாளின் (latter-day) ஊழியத்தையும், கடைசி-நாளின் அடையாளங்களையும், கடைசி-நாளின் பரிசுத்தாவி ஊற்றப்படுதலையும் உறுதிப்படுத்தும்படி, பரிசுத்த ஆவியானவர் இன்றைக்கு இங்கே கட்டாயம் இருக்க வேண்டும். அவைகளை நிறைவேற்றுவதற்கு பரிசுத்த ஆவியானவர் இங்கே இருந்தாக வேண்டும். அமைப்புகள் மூலமாக செய்யப்படும் கிரியைகளின் மூலமாக அதைப் பெறமுடியாது. தேவன் ஒரு வழியை வைத்துள்ளார். அவர் ஒருவர் மட்டுமே பரிசுத்த ஆவியைக் கொடுக்கமுடியும். 81. இப்போது, மோசே ஒரு இராஜாவைப் பெற்றிருந்தான், அந்த இராஜா தேவனாக இருந்தார், அவரே மோசேயை அபிஷேகம் பண்ணினார். பிலேயாம் கூட ஒரு இராஜாவின் கீழ் இருந்தான், அவன் பெயர் பாலாக். அது கிட்டத்தட்ட அரசியல் கட்டமைப்பைப் போல காணப்பட்டது, பாருங்கள், - பாலாக். பிலேயாம் தேவனுடைய ஒரு தீர்க்கதரிசி, செய்திக்காக பிலேயாம் பாலாக்கிடம் சென்றான். செய்திக்காக மோசே தேவனிடம் சென்றான் , அங்கே வித்தியாசம் காணப்பட்டது. 82. இருப்பினும் இருவரும் தீர்க்கதரிசிகளாய் இருந்தார்கள், ஏனென்றால் அவர்கள் இருவரும் தேவனால் அழைக்கப்பட்டிருந்தார்கள், இருவரும் தேவனை சந்தித்தார்கள், இருவரும் தேவனிடத்தில் பேசினார்கள். மேலும், இருவருமே ஆவியில்-நிறைந்தவர்களுமாய் இருந்தார்கள். இப்பொழுது நான் வீட்டிற்கு வருகிறேன், பாருங்கள். (இப்பொழுது நான் பாடப்பொருளுக்கு வருகிறேன்) இப்போது அவர்கள் இருவரும் ஆவியில் நிறைந்த மனிதர்களாயிருந்தார்கள். இப்போது அது உண்மையாயிருக்கிறது. பரிசுத்த வேதாகமம், “தேவன் பிலேயாமை சந்தித்தார், அவனுடன் பேசினார்” என்று கூறுகிறது. பாருங்கள்? 83. ஆகவே நாம் கவனிக்கிறோம், இந்த தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவரையும் பார்க்கிறோம். இருவருமே தீர்க்கதரிசிகளாயிருந்தனர், தேவனுடைய மனிதர்கள். இருவருமே அவர்களுடைய தலைமைக்கு சேவை செய்தார்கள். மோசே தேவனுக்கு சேவை செய்தான். பிலேயாம் பாலாக் என்பவனுக்கு சேவை செய்தான். 84. இங்கு கவனியுங்கள், ஆவிக்குரியவைகளையும் மற்றும் இயற்கையானவைகளையும் ஒப்பிடும் போது அது எவ்வளவு பரிபூரணமாய் அமைந்துள்ளது. தேவனால் அனுப்பப்பட்ட மோசே, தன் கடமையின் பாதையில் இருக்கும் பொழுது, இன்னொரு தேவமனிதனை சந்தித்தான். அவன் (மோசேயை) பலப்பரீட்சைக்கு அழைத்தான். இப்படிப்பட்டவைகளை உங்களால் கற்பனை செய்யக்கூடுமா? 85. ஆனால் அவர்கள் அங்கே எப்படிப்பட்டதான ஒரு அமைப்பைப் பெற்றிருந்தார்கள்! அது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட தேசமாக இருந்தது. 86. மோசே இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திக் கொண்டிருந்தான், வெறுமனே, அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்று தேவன் கூறுவார், ஒரு அக்கினி ஸ்தம்பத்தினால் வழிநடத்தப்பட்டார்கள், மேலும் இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று பாதையில் அவர்களை நடத்திச் சென்றது. மோசே, தேவனிடத்திலிருந்து வெளியே வந்த, அதாவது, லோகோஸ் (The Logos) மூலமாக, அந்த அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாக செய்திகளை மோசே பெற்றுக் கொண்டிருந்தான். அது உடன்படிக்கையின் தூதனாக இருந்தது, அது கிறிஸ்துவாக இருந்தது, அது அபிஷேகிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அங்கிருந்துதான் அவருடைய செய்திகளை பெற்றுக் கொண்டிருந்தான். அதை வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தின் பாதையில் இருந்த இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். 87. ஆனால் இந்த மனிதனோ எல்லா வசதிகளுடனும் குடியேறி இருந்தான். அவன் தனக்கென்று இராஜ்ஜியத்தைப் பெற்றிருந்தான். அவனுக்கு சபைகள் உண்டாயிருந்தன. அவன் அங்கே சகலத்தையும் நேர்த்தியாக பெற்றிருந்தான். ஆகவே, அவன் இந்த மனிதனை அழைத்துக் கொண்டு வந்து, இந்த ஜனங்களை சபிக்கும்படி அவனை அழைப்பிக்க மனிதர்களை அனுப்பினான். கவனியுங்கள், ஒரு தீர்க்கதரிசி, ஒரு தேவனுடைய மனிதன், வேறொரு மனிதனோடு தேவனுடைய கிரியைகள் இருப்பதை கண்டு, அந்த தேவனுடைய கிரியைகளை சவாலிட முயற்சிக்கிறதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவன் அதை அறிந்தபோது, இன்னும் சற்று நன்றாக அறிந்திருக்க வேண்டும். இப்போது பிலேயாம், முதலாவது அவன்... பாலாக் ஆட்களை அனுப்பி, “இங்கு வந்து இந்த ஜனங்களை சபிக்க வேண்டும்” என்று கூறினான். இப்போது பாலாக் என்பவன் அதேக் காரியத்தைச் செய்தான், அல்லது... எண்.22:6&12 88. பிலேயாம், அவன் செய்த காரியம் சரியானதாக இருந்தது. அவன் தேவனைத் தேடினான். முதலாவது அவன் தேவனைத் தேடினான். இப்போது, அவன் செய்திருக்க வேண்டிய காரியம் அதுவாகத்தான் இருந்தது. 89. அப்பொழுது தேவன், “அவனுடன் செல்லாதே! அவர்களை தனியே விட்டுவிடு. அந்த ஜனங்களை சபிக்காதே. அவர்கள் ஆசிர்வதிப்பட்டவர்கள்” என்று அவருடைய பரிபூரணமான தெள்ளத்-தெளிவான பதிலை கொடுத்தார். இப்போது, அதுவே போதுமானதாக இருக்க வேண்டும். தேவன் ஏதாவது ஒன்றைக் கூறுவாரானால், அவர் அதை மாற்றமாட்டார். கவனியுங்கள், அவருடைய பரிபூரண சித்தம் என்னவென்றால், “நீ போகாதே! அந்த ஜனங்களைத் சபிக்காதே, அவர்கள் என்னுடைய ஜனங்கள்” என்பதாக இருந்தது. அது தான் அவருடைய பரிபூரண சித்தமாக இருந்தது. 90. ஆனால் பிலேயாம் அந்த ஜனங்களை தொடக்கத்தில் இருந்தே விரும்பவில்லை. பாருங்கள், அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள். (அங்கேதான் காரியம்). இந்நாளில் நாம் எவ்வளவு பிலேயாம்களைப் பெற்றுள்ளோம்? அதேக் காரியம்! அதேக் காரியம்! அவர்கள் அதிகமாய் அறிந்திருக்கிறார்கள் . 91. நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாட்களிலும் அவர்கள் அப்படிப்பட்டவர்களைப் பெற்றிருந்தார்கள். நிக்கோதேமு வந்து, “ரபீ! நீர் தேவனால் அனுப்பப்பட்டிருக்கிறீர் அல்லது – அல்லது தேவனால் அனுப்பப்பட்ட ஒரு போதகர் என்பதை அறிவோம். தேவன் அவனுடன் இல்லையெனில், நீர் செய்கிற கிரியைகளை ஒரு மனிதனும் செய்யமுடியாது” என்று கூறினான். பாருங்கள், அதை அவர்கள் அறிந்திருந்தனர். மறுபடியும் அங்கே ஒரு பிலேயாம், பாருங்கள். யோ. 3:2 92. இப்போது, பிலேயாம் அந்த ஜனங்களை விரும்பவில்லை. அவனுடைய தலைமையகத்தை கவனியுங்கள். அவர்கள், “இப்போது அங்கே ஒரு கூட்ட ஜனம் வந்து கொண்டிருக்கிறது. நான் உம்மை ஒரு தீர்க்கதரிசி என்று புரிந்து கொண்டிருக்கிறேன், நீர் ஒரு மகத்தான மனிதர். ஆகவே நீர் அங்கு வந்து அந்த ஜனங்களை சபிக்கவேண்டும்” என்று அவனிடம் கூறும்படி சில நல்ல மனிதர்களை அவனிடம் அவர்கள் அனுப்பினார்கள். 93. பிலேயாம், “இப்போது, நான் போய் ஜெபிக்குமட்டும், ஒரு நிமிஷம் காத்திரு. மேலும், முழு இரவும் தங்கியிருங்கள். ஒருவேளை கர்த்தர் என்னை சந்திப்பார், அவர் என்னிடத்தில் சொல்லுவார்” என்று கூறினான். எல்லாம் சரி, அடுத்த நாள் காலை, கர்த்தர் அவனைச் சந்தித்து, “போகாதே! அந்த ஜனங்களைச் சபிக்காதே. அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று கூறினார். 94. நல்லது, பிலேயாம் வெளியே சென்று, “நல்லது, நான் போகமுடியாது, ஏனென்றால் போகக்கூடாது என்று கர்த்தர் எனக்கு சொன்னார்” என்றான். 95. இப்போது கவனியுங்கள், அவனுக்காக அங்கே சென்று, தாங்கள் பெற்றிருந்ததான இந்த கூடுகை முடிவுக்கு வந்ததை அவர்கள் திரும்பிச் சென்று, தலைமையகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, காண நேர்ந்தது என்னவெனில், தலைமையகம் வேறு ஒரு சிறந்த ஜனங்களை, உயர்மட்டத்தில் உள்ள மரியாதைக்குரியவர்களை, அனுப்பிவைத்தது. ஒருவேளை ஒரு ஆயராக (bishop) இருக்கலாம், வேறு ஒருவராகக்கூட இருக்கலாம், அல்லது மாநில திருச்சபை மூப்பராகக்கூட இருக்கலாம். “கீழே சென்று எப்படியாயினும் நிறுத்தச் சொல்லும்படி அவனிடத்தில் கூறுங்கள்!” என்று அவனிடத்தில் கூறும்படி யாரோ ஒருவரை அனுப்பினது, பாருங்கள். 96. கவனியுங்கள், இன்னும் சற்று அதிக வெகுமதிகள், இன்னும் அதிக பணம், அவனுடைய இன்னும் செல்வாக்கு மிக்க குழுவினர், அவனிடம், “நான் உன்னை உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்த்தமுடியும். ஒரு சாதாரண மனிதனாக இருப்பதைவிட உன்னை இன்னும் சற்று உயர்ந்த ஸ்தானத்தில் இப்பொழுதே வைக்கமுடியும், அதைச் செய்வதற்கு எனக்கு அதிகாரம் உண்டு, ஏனென்றால் இங்கே இந்தப் பெரிய இயக்கத்தின் இராஜாவாக இருக்கிறேன். அதை மட்டும் நீ செய்வாயானால், நான் – நான் உனக்கு இன்னும் சற்று சிறப்பான காரியங்களைச் செய்வேன்” என்றான். எண்.22:5-17 97. கவனியுங்கள், புதிதாக கொடுக்கப்பட்ட சலுகை அவனைக் குருடாக்கிவிட்டது. தேவன் என்ன கூறினாரோ, அதை அவர் செய்வார் என்பதை அவன் அறிந்தவனாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அவனைக் குருடாக்கிவிட்டது. தேவனுடைய ஒரு தீர்க்கதரிசி என்ற முறையில், அப்படிப்பட்ட ஒரு குழுவினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டவனாய் இருந்திருக்கக் கூடாது. தொடக்கத்திலேயே அந்த குழுவினரை விட்டு அவன் வெளியே வந்திருக்க வேண்டும். 98. இங்கு இருக்கிற தேவனுடைய சில மனிதர்களிடம் நான் பேசுவேனேயானால்! அவர்கள் தலைமையகத்தில், உன்னிடம் “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டது” என்று கூற முயற்சிக்கும்போது, நாம் அதைத்தான் இங்கு செய்து கொண்டிருக்கிறோம், கர்த்தராகிய இயேசு நம்மை ஆசீர்வதிக்கிறார், அவர்கள் உன்னிடம், “அது ஒரு கூட்ட மதவெறி பிடித்தவர்கள், மனக்கிளர்ச்சி மற்றும் உணர்ச்சிவசப்படுபவர்கள், தெய்வீக சுகமளித்தல் என்கிற ஒரு காரியமே அங்கு கிடையாது” என்று அவர்கள் கூற முயற்சிக்கும் போது, சரியாக அங்கேயே அந்தக் குழுவினரை விட்டு வெளியே வாருங்கள். [சகோதரன் பிரான்ஹாம் தன் விரலை சொடுக்குகிறார் - ஆசி.] அதை விட்டு வெளியே வாருங்கள், ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தலாய் இருக்கிறது. அவர்கள், “அப்போஸ்தலர்களின் நாட்கள் என்ற காரியம் எதுவும் கிடையாது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது எதுவும் கிடையாது. அந்த அந்நியபாஷையில் பேசுதல், அங்கே அதெல்லாம் எதுவும் கிடையாது” என்று கூறுகிறார்கள். 99. ஓ, ஆனால், சகோதரரே அதற்குச் செவி கொடுக்காதீர்கள்! இந்நாளில், பிலேயாம் போல ஏராளமானவர்கள் இருக்கிறார்கள், பின்னால் அவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு, வேதாகமத்தின் புத்தகங்களை படித்துக் கொண்டு, இதுவே சத்தியம் என்பதை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், பதவிகளைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். அது மிகவும் சரியே, கவனியுங்கள், தேவன்... இக்குழுவினருடன் தான் இருக்கக்கூடாது என்பதை அவன் அறிவான், அல்லது பிலேயாம் அதை அறிந்து இருக்கவேண்டும். அவர்கள், தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக சென்றுவிட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் மிகச் சரியாக தேவனுடைய சித்தத்திற்கு புறம்பான காரியங்களை உங்களிடம் பேசுவார்கள். தேவனுடைய சித்தம் என்ன என்பதை நீங்கள் கண்டு கொள்ளும்போது, அதற்கு புறம்பாக ஒருவரையும் பேச அனுமதிக்காதீர்கள். 100. நான் சில அருமையான ஜனங்களை அறிந்துள்ளேன், கூட்டங்களுக்கு வருகிறார்கள், சுகமடைகிறார்கள், திரும்பிப் போய் விடுகிறார்கள். அவர்கள், “ஓ! நல்லது, அதில் ஒன்றுமே இல்லை, நீங்கள் மனக்கிளர்ச்சி அடைந்திருக்கிறீர்கள். அதில் ஒன்றுமே இல்லை” என்று கூறுகிறார்கள். அப்பொழுது ஜனங்கள் சந்தேகத்திற்குள்ளாக செல்கின்றனர். ஜனங்கள் வந்து, இயேசுகிறிஸ்துவை தங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, திரும்பிச் செல்வதை நான் கண்டிருக்கிறேன்; ஒருவேளை அந்நியபாஷையில் பேசி, திரும்பிச் சென்றிருக்கலாம். சபையானது, “ஏன், நீங்கள் ஒரு – நீங்கள் கிறிஸ்தவத்திற்கு ஒரு அவமானமாக இருக்கிறீர்கள்” என்றும் மற்றும் அதைப் போன்றதையும் சொல்லும். அதை செய்யாதீர்கள், பாருங்கள். அந்த குழுவினரை விட்டு வெளியே வாருங்கள்! அதைவிட்டு தூரமாய் இருங்கள். 101. கவனியுங்கள், பிலேயாம் தன் மனதிருப்திக்காக நடக்காத ஒரு காரியத்தை கூறுகிறான். பாருங்கள். அவன், “பார்க்கலாம், இன்னொரு இரவும் இங்கு நீங்கள் தரித்திருங்கள், ஒருவேளை நான் தேவனிடத்தில் கேட்பேன் நீங்கள் பாருங்கள் ஒருவேளை அவர் தம்முடைய சிந்தையை மாற்றியிருப்பார்” என்று சொன்னான். எண்.22:19 102. ஆனால் தேவன் தமது சிந்தையை மாற்றமாட்டார். பெந்தெகொஸ்தே தினத்தன்று தேவன் நமக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் பிரகடனத்தைக் கொடுக்கும்போது, அந்த வழிமுறையை தான் அவர் கடைபிடிக்க வேண்டியதாயிருந்தது. பரிசுத்த வேதாகமத்தின் எல்லாக் காலங்களிலும் அவர் அவ்வாறே செய்து வந்துள்ளார். வேறு எந்த நேரத்திலும், ஒரு மனிதன், அங்கே அவர் அருளின அவைகளின் அடிப்படையில் வரும்போது அவர் அதையே செய்வார். நீங்கள் விசுவாசித்து, மனந்திரும்பி, உங்கள் பாவமன்னிப்பிற்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்தவர்களாய், தேவனை விசுவாசித்து நீங்கள் வருவீர்களென்றால், சரியாக மருந்து சீட்டில் எழுதப்பட்டுள்ளவைகளை நிறைவேற்ற தேவன் கடமைப்பட்டுள்ளார், ஏனென்றால், அவரே மருத்துவராய் இருக்கிறார். நீங்கள் அதற்கு – நீங்கள் அதற்கு கீழ்ப்படிந்தால் அவர் அதை நிறைவேற்றுவார். 103. ஆனால், இப்பொழுது இந்த மருந்துக் குறிப்பை நீங்கள் மருந்து தயாரிக்கும் ஒரு போலி மருந்து கையாள்பவரிடம் (quack druggist) கொண்டு போய் அதைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் காரியத்தை உங்களால் செய்ய முடியாது, அவர் அதனோடு வேறு ஏதாவதொன்றை கலந்து விடுவார். அது ஒருவேளை நோயாளியையே கொன்றுவிடும். அதன் காரணமாகவே நாம் இந்நாட்களில் ஏராளமான மரித்துப்போன சபை அங்கத்தினர்களைக் கொண்டுள்ளோம், அவர்கள் மருந்து சீட்டுக்கு தவறான மருந்துகளைக் கொடுக்க முயற்சிக்கின்றனர். தேவன் சரியான மருந்து சீட்டை பரிசுத்த வேதாகமத்திலேயே வைத்துள்ளார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எப்படி மருந்தைக் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர் எழுதிக் கொடுத்தாரோ அந்த வழியில்தான் அந்த மருந்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். எபி.13:8 104. பரிசுத்த வேதாகமம் கூறுகிறது: “அங்கே இல்லையா – அங்கே கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையா? அங்கே ரணவைத்தியன் இல்லையா?” உண்மையாகவே அது அங்கே இருக்கிறது. “பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி இந்த நிலையில் இருக்கிறாள்?” எரே.8:22 105. பாருங்கள், நாம் பரிசுத்த வேதாகமத்தை வைத்துள்ளோம். நாம் மருத்துவரைப் பெற்றிருக்கிறோம். அது வெறுமனே ஒரு மருந்து தயாரிப்பாளர், வேதாமக மருந்துக் குறிப்பை தவறாக நிரப்புவதாக இருக்கிறது. அது அவ்வாறுதான் இருக்கிறது. நீங்கள், “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதோ மற்றும் இந்தக் காரியங்கள் அனைத்தும், அப்படிப்பட்ட எதுவுமே கிடையாது. அது முட்டாள் தனமானது” என்று சொல்ல முயற்சிக்கிறீர்கள். பரிசுத்த வேதாகமம் மிகவும் சரியாக இருக்கிறது. தேவன், தாம் கூறியதை ஒருபோதும் திரும்பப் பெறமாட்டார். அவர்கள் போலியான ஒன்றைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள், வேறு ஒரு காரியத்தை, அதாவது, “நல்லது, ஆனால் நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்” என்பதைப் போல. நல்லது, நீங்கள் எதை விசுவாசித்தாலும் அது ஒரு பொருட்டல்ல. 106. தேவன் இதைத் தான் கூறினார். அவர், “மாம்சமான யாவர் மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன்” என்று கூறினார். கடைசி நாட்களுக்கென்று இதை அவர் வாக்களித்துள்ளார். யோவேல் 2:28, அப்.2:17 107. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற கூட்டங்களைக் குறித்து அவர்கள் என்ன கூற முயற்சிக்கின்றார்கள்! அவர்கள் என்னை “ஒரு குறிசொல்லுகிறவன் என்றும், ஒரு – ஒரு – ஒரு மெருகேற்றப்பட்ட குறிசொல்லுகிறவன் என்றும் அல்லது ஒரு – அல்லது ஒரு பிசாசுகளின் தலைவன் என்றும் அல்லது ஒரு வகையான பிசாசு” என்றும் கூறுகின்றனர். நல்லது, அவர்கள் அவ்வாறுதான் கூறவேண்டும், ஏனென்றால், அவர்கள் அவர்களுடைய பிதாவால் உண்டானவர்கள். தொடக்கத்தில் இயேசுவையும் அவ்வாறே அவன் கூறினான். எப்படியிருப்பினும், அதை நாம் செய்யவில்லை, அதை இயேசுவே செய்கிறார். ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது அவருடைய ஆவியாகும். மத்.12:24 108. ஓ, அவருடைய கட்டளைக்கு புறவழியாய் செல்கிற... தவிர்த்துச் செல்கிற... செல்ல முடிகிற ஏதோ ஒன்று. அநேக ஜனங்கள் அதைக் கடந்து செல்ல முயற்சிக்கின்றனர். “ஓ, வந்து சபையில் சேர்ந்து கொள்ளுங்கள், அப்பொழுது எல்லாம் சரியாகிவிடும். நாங்கள்தான் மிகப் பழமையான சபை. இங்கே நாங்கள் பல வருடங்களாக இருந்து வருகிறோம். நாங்கள் தொடங்கினோம்...” ஆம், அது சரிதான். அது அப்படியிருக்குமானால், ரோமன் கத்தோலிக்க சபையானது உங்கள் எல்லாருடையதையும் சேர்த்து அது பெற்றிருக்கிறது. ஸ்தாபனங்களில் முதலில் தோற்றுவிக்கப் பட்டது அவர்கள்தான். அவர்கள் முதலானவர்களாக இருந்தார்கள். ஆனால், ஞாபகம் கொள்ளுங்கள் அது முதல் சபையல்ல. அது முதலாவது தொடங்கப்பட்ட ஸ்தாபனம். அவர்கள் எல்லோருக்கும் தாயானவள். அவைகள் ஒவ்வொன்றும் தேவனுக்கு முரண்பட்டவைகளாகும். வெளிப்படுத்தின விசேஷம் 17-ஆம் அதிகாரம் அதே காரியத்தைத் தான் சொல்கிறது. பாருங்கள். ஆம், நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், இருப்பினும், தேவன் உங்களை அனுமதிப்பார். பாருங்கள், இப்பொழுது. பின்பு பிலேயாம், அவன் எண்ணினான்: “நல்லது...?” 109. பின்னர் தேவன் அவனிடம், “புறப்பட்டுச் செல்” என்றார். ஏன்? அவன் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை தேவன் அறிந்திருந்தார். தொடக்கத்திலேயே அவன் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை தேவன் அறிவார். ஆகவே அவர் அவனிடத்தில், “புறப்பட்டுச் செல்” என்று கூறினார். அவர் அதை அனுமதிப்பார். அவர் உன்னை அவ்விதம் செய்ய அனுமதிப்பார். அநேக நேரங்களில், அதைச் செய்கையில், அவர் உங்களை ஆசீர்வதிக்கவும் செய்வார். 110. அதன் பிறகும் கூட அவர் இஸ்ரவேலை ஆசீர்வதித்தார். கிருபையானது ஏற்கனவே அவர்களுக்கு, ஒரு தீர்க்கதரிசி, அக்கினி ஸ்தம்பம், ஒரு விடுதலை, அடையாளங்கள் அற்புதங்கள் போன்றவற்றைக் கொடுத்திருந்தது; எகிப்திலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தது மற்றும் பிற அனைத்தையும் செய்தது. அப்படியிருந்தும் அவர்கள் நியாயப்பிரமாணத்தை விரும்பினார்கள். அவர்கள் அதை பெற்றுக் கொள்ளும்படி தேவன் செய்தார், ஆனால் எல்லா நேரங்களிலும் அது அவர்களை சாபத்திற்குள்ளாக்கியது. 111. அவன் என்ன செய்ய விரும்பினானோ அதைச் செய்யும்படிப் போக பிலேயாமை அவர் அனுமதித்தார். ஆனால், அவன் என்ன செய்தான்? அங்கே கீழே இறங்கிச் சென்றான். ஜனங்களைச் சபிப்பதற்குப் பதிலாக, அவன் அந்த ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டியதாயிற்று. தேவன் ஆசீர்வதித்ததை அவனால் சபிக்கமுடியாது. 112. மேலும் நான் – நான் உங்களிடம் ஒன்பது மணியளவில் முடிக்கப் போவதாகக் கூறினேன். நான் மேலே பார்த்தேன், இப்போது அந்த மணி நேரம் வந்துவிட்டது. மேலும் நான் ஒரு புத்தகம் வைத்துள்ளேன், அது முழுமையும் குறிப்புகள் நிறைந்துள்ளது. 113. முடிக்கிற நேரத்தில், நான் இதைக் கூற விரும்புகிறேன், தேவன் அவருடைய சிந்தையை ஒருபோதும் மாற்றினது இல்லை. அவருடைய நேரடியான சித்தம் என்னவென்றால், பிலேயாம் அங்கு போகக்கூடாது என்பதுதான். தேவன் ஒன்றை அறிவித்தால், அது எப்போதும் சத்தியமாகவே இருக்கும். 114. இப்போது, பரிசுத்த வேதாகமம், “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறுகிறது. இப்போது, “அது ஒரு குறிப்பிட்ட வழியில்” என்ற அர்த்தத்தில் அது கூறப்படவில்லை. அதன் பொருள் என்னவென்றால் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதே! பரிசுத்த யோவான் 14:12ல், இயேசு கூறினார்: “என்னை விசுவாசிக்கிறவன் என்னிலும் பெரிதான கிரியைகளைச் செய்வான்.” அது சரியா? மாற்கு 16-ல், அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார்: “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்.” அவர்கள், “நல்லது, அது அப்போஸ்தலர்களுக்கே உரியது” என்று கூறுகின்றனர். 115. அவர், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும் இந்த அடையாளங்கள் அவர்களைப் பின்தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். என் நாமத்தினாலே நவமான பாஷைகளைப் பேசுவார்கள். அவர்கள் சர்ப்பங்களை எடுத்தாலும், அல்லது சாவுக்கேதுவானதைக் குடித்தாலும், அவர்களை ஒன்றும் சேதப்படுத்தாது. அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தால், அவர்கள் சுகமடைவார்கள்” என்றார். இப்பொழுது, அதுதான் அவருடைய தகுதி. மாற்.16:15-18, யோ.14:12 116. பாருங்கள், ஒரு விதமான தகுதியைப் பெற்றுக் கொள்ள நாம் முயற்சி செய்கிறோம். தேவனுடைய வார்த்தையைக் குறித்து நாம் என்ன நினைக்கிறோமோ அதிலே சபை தகுதியடையும்படி நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சபையைத் தகுதிப்படுத்த நம்மால் கூடாது. தேவனுக்கு நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கவேண்டும். 117. இது ஒரு மகத்தான பொருத்தமான நேரம் என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். படிக்கட்டுகளுக்கு நீங்கள் சிவப்பு வர்ணம் பூசுங்கள், பின்னர் உங்கள் அண்டை வீட்டுக்காரரும் சிவப்பு வர்ணம் பூசுவதை கவனியுங்கள். சில ஸ்திரீகள் சபையில் ஒருவித தொப்பியை அணிகிறீர்கள், பின்னர் மீதமுள்ள ஸ்திரீகளும் அதையே பெற்றுக் கொள்வதை கவனியுங்கள். 118. திருமதி. ஜேக்குலின் கென்னடி (Mrs. Jacqueline Kennedy) இங்கே தண்ணீர்-தலை (water-head haircut) என்ற வடிவமைப்பில் முடி திருத்தம் செய்திருந்தார், அதன் பின்னர் எல்லா ஸ்திரீகளையும் கவனியுங்கள். பழுப்பு நிறத்தில் உள்ள அந்த சிறிய – உடைமேலங்கியை (aprons) அவள் அணிந்திருந்தாள் அல்லது அதைப் போன்ற ஒன்றை. அவ்விதமாக இறுக்கிப் பற்றிப் பிடித்துள்ள (stretched on) அந்த விதமான உடைகளோடு தெருக்களில் நடமாடுவது பெண்களுக்கு பெருத்த அவமானம். பின்னர் எல்லாப் பெண்களுமே அவ்விதமே நடந்து கொள்வதைப் பாருங்கள். அது ஒரு ஆள்மாறாட்டமாகும், மற்றொருவரைப் போல் நடந்து கொள்வது, ஆனால் அது உலகத்தில் காணப்படுகிறது. சபை ஜனங்களும் கூட அதைத் தெரிந்து கொண்டார்கள். அவர்களும் அவ்விதம் செய்வது அவமானகரமான காரியம். அவ்வாறு செய்வது அவர்களுக்கு தவறானதாக இருக்கிறது, அது ஒரு அவமானம். அது பெந்தெகொஸ்தேவிலும் தழுவுவதை நாம் பார்க்கும்போது, அது பெருத்த அவமானகரமாக இருக்கிறது. அது சரியே. ஆனால், சபை அதை ஏற்றுக்கொண்டு, அவ்விதமாகச் செய்வதை அனுமதிக்கிறதை, நாம் பார்க்கிறோம். 119. இப்போது, நாம் அதை பொருட்படுத்துகிறதில்லை. என்னுடைய மேலங்கி, என்னுடைய கால்சட்டைக்கு பொருத்தமானதாக இருக்கிறதா அல்லது என்னுடைய கழுத்தில் கட்டி தொங்கவிடப்படும் துணி [Tie – டை] என்னுடைய மேலங்கிக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நான் ஒருபோதும் கவனம் செலுத்தியதே இல்லை. என்னுடைய அனுபவம், தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தோடும், அவருடைய தேவைகளோடும் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன். பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நாம் அவ்வாறுதான் செய்ய வேண்டும், சரியாக அவர்களைப் போலவே நம்முடைய அனுபவமும் இருக்க வேண்டும், ஏனென்றால் அவர் அதே இயேசுவாக இருக்கிறார், அதே பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார், அதே வல்லமையுடன் இருக்கிறார். அவர் இன்றும் ஜீவிக்கிறார், அவர் நம் மத்தியில் ஜீவிக்கிறவராக இருக்கிறார். 120. இது ஒன்றை எனக்கு நினைவூட்டுவதாக இருக்கிறது, ஒரு நாள் அவருடைய தாயார், அவருடைய வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்புடன் எருசலேமிலே ஆராதித்து விட்டு, தூரமான இடத்திற்கு சென்றிருந்தார். அவர்கள் மூன்று நாள் பயண தூரம் சென்றிருந்தனர். அவரும் அவர்களுடன் வருகிறார் என்று நினைத்தார்கள், ஆனால் அவர் அங்கு இல்லை என்பதைக் கண்டார்கள். லூக்.2:43-44 121. உங்களுக்கு தெரியுமா, அதை இந்த நாளுக்கு ஒப்பிட நான் விரும்புகிறேன். சபையானது மூன்று கட்ட பிரயாணத்தை பெற்றிருந்ததாய் இருக்கிறது. லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தே; மூன்று – கட்ட பிரயாணம். தேவன் லூத்தருக்கு ஒரு செய்தியைக் கொடுத்தார் – நீதிமானாக்கப்படுதல்; அவர் அதில் நிலைத்திருந்தார். அதற்குப் பின் வெஸ்லி மூலமாக பரிசுத்தமாக்கப்படுதல் வந்தது; அதற்குப் பின்பு பெந்தெகொஸ்தேயோடு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வந்தது. நான் வியப்படைகிறேன், எங்கோ ஓரிடத்தில் ஏற்படும் மகத்தான எழுச்சியைக் கொண்டு நாம் இவைகளை விட்டு வெளியேறவில்லை என்றால், அதாவது, பெரிய பெரிய கட்டிடங்களைக் கட்டுவது, மகத்தான காரியங்களைச் செய்வது, பிலேயாம் அவனுடைய சிந்தையில் கொண்டிருந்தது போல; பெரிய ஸ்தாபனங்கள், ஒன்றைவிட மற்றொன்று அதனினும் பெரியதாக, இந்த ஒன்று அதிகப்படியானது – ஞாயிறு பள்ளியினருக்கு தங்கப்பதக்கம் கொடுப்பது மற்றும் அதிகமான நபர்களை உள்ளே கொண்டு வந்தவர்களுக்கு நட்சத்திர சின்னங்களைப் கொடுப்பது போன்றவைகள். எதை வேண்டுமானாலும் சபைக்குள் நடப்பிக்கிறார்கள். 122. நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒரு சபை இருக்கிறது, அங்கே மாய்மாலம் ஒன்றும் இருக்காது. அதுதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையாகும், அது பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளது. நீங்கள் கட்டாயத்தின் பேரில் அங்கே இருக்கமாட்டீர்கள். நீங்கள் அதிலே பிறந்துள்ளீர்கள். பரிசுத்த ஆவியினால் நீங்கள் அங்கு அனுப்பப் பட்டுள்ளீர்கள். 123. அவர்கள் கண்டு கொண்டார்கள், அவர் அவர்களுடன் இல்லை என்பதை பெற்றோர்கள் கண்டுகொண்டனர். 124. இப்போது இந்த மணி நேரத்தில், இந்த மகத்தான நெருக்கடியானது நடப்பில் உள்ளது (this great crisis is on). இந்த தேசம் அசைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறியும் போது, தேசம் மட்டுமல்ல, ஆனால் முழு உலகமே அசைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அது கடைசிக் காலத்தில் இருக்கிறது. சம்பவிக்க வேண்டியதில் எனக்குத் தெரிந்தவரை எடுத்துக் கொள்ளப்படுதலைத் தவிர, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையைத் தவிர வேறொன்றும் இல்லை. அனைத்தும் ஆயத்தமாயிருக்கின்றன. 125. நாம் இப்படிப்பட்ட கூட்டங்களைப் பார்க்கிறோம். ஓ, ஒவ்வொரு நன்மையையும் பெற்றுக் கொள்ளுங்கள். வருகிற கூட்டங்களில், அதிலிருந்து உங்களால் எதையெல்லாம் பெற்றுக் கொள்ளக் கூடுமோ அவைகளை எல்லாம் அக்கூட்டங்களில் பெற்றுக் கொள்ளுங்கள். அவை தேவனால் உண்டானவை. நீங்கள் பரிசுத்த ஆவியை பெறாமலிருப்பீர்களென்றால், இங்கே பரிசுத்த ஆவியைப் பெறாமல் வெளியேறப் போவதில்லை என்பதாக உங்கள் சிந்தையில் வைத்துக் கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கான வழி அதுதான். அங்கேயே தரித்திருங்கள், ஏனென்றால் நீங்கள்... இது உங்களுக்குக் கிடைக்கிற கடைசி வாய்ப்பாக இருக்கக்கூடும். ஒருவேளை மேற்குக் கடற்கரையில், இன்னொரு கூட்டம் ஒருபோதும் இல்லாமல் போகலாம். இன்னொரு கூட்டம் நடப்பதற்கு முன்பாக, அந்தச் சமயத்தில், ஒருவேளை இது கடலுக்கடியில் போயிருக்கலாம். ஆகவே என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது, ஆகவே நாம்... தேவனுடைய நியாயத்தீர்ப்பு தேசங்கள் மீது வருவதற்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 126. இப்பொழுது நான் இதைக் கூறட்டும். அவர்களுடனே அவர் வந்து கொண்டிருக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், கடினமான அந்த நேரத்தில் அவர் தங்களுடன் வரவில்லை என்பதைக் கண்டார்கள். பாருங்கள், அவர் அவர்களுடன் இல்லை. 127. இப்போது, நாம் பார்க்கிறோம், இந்த மகத்தான காரியம் முக்கியத்துவம் ஆனபோது, அந்நேரத்தில், நாம் நம்முடைய சபைகளில் ஏதோ ஒன்றை இழந்துள்ளதைக் காண்கிறோம், அது கிறிஸ்துவின் வல்லமையே. 128. இப்போது, கவனியுங்கள், நான் விமர்சிக்கவில்லை. நான் உங்களை நேசிக்கிறேன், நேர்மையானதும், உண்மையானதுமான அன்பு எப்பொழுதும் சீர்படுத்தும். இப்போது, நம்முடைய சபையில் நாம் கிறிஸ்துவை இழந்துவிட்டோம். நாம் கிறிஸ்துவை இழந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய பெந்தெகொஸ்தே ஜனங்கள், நம்முடைய சகோதர சகோதரிகள் கிறிஸ்துவை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒன்று தவறாக உள்ளது. அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்த பண்டைய பாணியிலான ஜெபக்கூட்டங்கள், பகல் முழுவதும் மற்றும் இரவு முழுவதும் ஜெபிக்கிற கூட்டங்கள், இனி அவர்கள் அவைகளை பெறப் போவதில்லை. நம்முடைய ஸ்திரீகள் நீளமான முடியை வைத்திருப்பார்கள்; அவர்கள் இனி ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டார்கள். முன் நாட்களில் ஸ்திரீகள் வர்ணம் தீட்டுவதும், வர்ணம் பயன்படுத்துவதும், இந்த ஸ்திரீகள் நடப்பதைப் போல நடந்து கொள்வதும் அவமானமான செயலாக காணப்பட்டது. ஏதோ தவறாகப் போய்விட்டது. கிறிஸ்துவில் எந்தத் தவறும் இல்லை. பாருங்கள், ஆனால் ஏதோ ஒன்று தவறாகப் போய்விட்டது. ஏதோ ஒன்று வேறெங்கேயோ இருக்கிறது. பிரசங்கபீடத்தில் அதுபோன்ற காரியங்கள் வழக்கமாக அனுமதிக்கப்படாது. ஆனால், இப்பொழுது அதைச் செய்ய அது அனுமதிக்கிறது. பாருங்கள், நெருக்குதல் நடப்பில் உள்ளது. ஏதோ ஒன்றை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். 129. நாம் பெற்றிருக்க வேண்டிய வல்லமையை நாம் இழந்து விட்டோம், அங்கே மகத்தான பெரிய இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும், மகத்தான அடையாளங்களும், அற்புதங்களும் நடந்திருக்க வேண்டும். நல்லது, இப்போது, ஒரு பாவிகூட இந்த இடத்தில் இருக்கக் கூடாதபடி, இந்த கட்டிடம் கூட தேவனுடைய வல்லமையினால் முழுமையாக நிரப்பப்பட்டிருக்க வேண்டும்; பரிசுத்த ஆவியானவர் அதைக் கடிந்துகொள்கிறார், அதைப் போன்ற மிகத்துரிதமாக அனனியா, சப்பீராள் போல. நாம் எதையோ இழந்து போயுள்ளோம். அப்.5:1-10 130. இப்பொழுது என்ன நடந்தது? அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் சென்றனர், அவர்களுடைய உறவினர்கள் மத்தியில். அவர்களுடைய உற்றார் உறவினர் மத்தியில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, அவரை எங்கே கண்டுபிடித்தார்கள்? சரியாக அவர்கள் அவரை எங்கே தொலைத்தார்களோ அங்கேதான். லூக்.2:45 131. மேலும் நான் நினைக்கிறேன், நாம் கொண்டிருந்த இந்த மகத்தான ஸ்தாபன எழுச்சியை சபையானது பெற்றுக் கொண்டபோது, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் திறம்பட இருக்க வேண்டியதாயிற்று, பெரிய சபைகளை பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று, உயர்வகுப்பு ஜனங்கள், நன்றாக உடை உடைத்துபவர்கள், சிறந்த பாடகர்கள், அங்கே அவர்கள் நின்று கொண்டு... 132. நன்றாகப் பாடுவதை நான் விரும்புவேன். உண்மையான, சிறந்த பண்டைய பெந்தெகொஸ்தே பாடல்களை நான் விரும்புவேன். ஆனால் அதில் சேர்க்கப்பட்டு புதிய வடிவம் (put-on stuff) கொடுப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது, அது என்னோடு ஒத்துப் போகாது. கேட்க வேண்டும் என்பதற்காக முகம் நீல நிறமாக மாறும் அளவிற்கு மூச்சை பிடித்துக் கொண்டு பாடுவது. ஆனால் உங்கள் இருதயத்திலிருந்து, தேவனுடைய ஆவியில் பாடவேண்டும் என்பதை நான் விசுவாசிக்கிறேன், சற்று நேரத்திற்கு முன்பு நான் இங்கே கேட்டதுபோல இருக்க வேண்டும். பாருங்கள்? 133. பண்டைய – பாணியில் சிறந்த சத்தமிடுதலை நான் விரும்புகிறேன். ஆனால் நான் நினைப்பது என்னவெனில், இசையானது இசைக்கப் பட்டாலும் அல்லது நிறுத்தப் பட்டாலும் சத்தமிடுதலானது போய்க் கொண்டே இருக்கும். ஜனங்கள் மேலுள்ள தேவனுடைய ஆவியானது, தேவனுடைய ஆசீர்வாதத்தையும், வல்லமையையும் கீழே கொண்டு வருகிறது. மனிதன் வேலை ஸ்தலத்திலோ அல்லது அவர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் சாட்சி பகர்ந்து, பாடி, தேவனை துதிக்க முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். உண்மையாக. 134. இப்பொழுது, நாம் சிலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம். அவரை நாம் எங்கே கண்டுபிடிக்கலாம்? சரியாக நாம் அவரை எங்கே தொலைத்தோமோ அங்கே தான் – வார்த்தையில். நாம் ஜெபம் பண்ணுவோம், 135. அன்புள்ள பரலோகப் பிதாவே, இந்த இரவுகளில் ஒருநாள் இரவு கடைசி முறையாக இந்த வேதாகமத்தை மூடிவைக்கப் போகிறோம், கடைசிப் பாடல் பாடப்படப் போகிறது, கடைசிப் பிரசங்கம் முடிக்கப்பட்டிருக்கும், கடைசி ஜெப வரிசை அழைக்கப்பட்டிருக்கும், கடைசி பாவி உள்ளே வந்திருப்பார். அதற்குப் பிறகு என்ன இருக்கிறது? ஓ, அன்புள்ள தேவனே, உம்முடைய அனுமதிக்கும் சித்தத்தை நாங்கள் விரும்பவில்லை, பிதாவே, உம்முடைய பரிபூரண சித்தத்தில் நாங்கள் நடக்கட்டும். இங்கு ஒரு வார்த்தையும், அங்கு ஒரு வார்த்தையும் நாங்கள் எடுத்து, மனிதனால் உண்டாக்கப்படும் நம்பிக்கைக்கும், கோட்பாடுகளுக்கும் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றுக்கும் அதைப் பொருத்தாதிருப்போமாக. வார்த்தையை அது இருக்கிற வண்ணமாகவே நாங்கள் எடுத்து, முழு சுவிசேஷத்தையும் விசுவாசித்து, எதை எதைச் செய்ய வேண்டும் என்று இயேசு கற்பித்தாரோ அவை அனைத்தையும் நாங்கள் எடுத்துக் கொள்வோமாக. அப்போஸ்தல நடபடிகளின் புத்தகம் ஒரு கட்டமைப்பு மட்டுமே என்று நாங்கள் விசுவாசிக்கவில்லை. அது தேவனுடைய வார்த்தை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அது உம்முடைய பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்குள் இருந்து கிரியை நடப்பித்ததாகும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். கர்த்தாவே, அவர்கள் மேல் வந்த அதே பரிசுத்த ஆவியானவர், அவர்கள் கிரியை செய்த விதமாகவே, அது எங்கள் மீது வரும்போது, அது அதே ஆவியாயிருக்கும் பட்சத்தில், எங்களுக்குள் அது அதே காரியத்தை நடப்பிக்கும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 136. ஆகவே நான் ஜெபிக்கிறேன், அன்புள்ள தேவனே, நாளைய இரவு தொடங்க இருக்கும் கூட்டங்களின் முந்தைய பகுதியில் நாங்கள் இருக்கிறோம். பரலோகப் பிதாவே, உம்முடைய பிரசன்னத்தின் நிமித்தம் இந்தக் கூட்டங்களானது, இந்தப் பட்டணம் இதுவரைக் கண்டிராத அளவிற்கு மகத்தானதாக இருப்பதாக. செய்தி கொடுக்கிற ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும், ஓ, தேவனே, அது அவ்வளவான – அவ்வளவான ஒரு அசைக்கப்படுதலாக இருக்கட்டும், தேவனுடைய கோபாக்கினை பிரசங்க பீடத்திலிருந்து முழக்கமிடட்டும். பாவிகள் அசைக்கப்படுவார்களாக, பயந்து நடுங்குவார்களாக. ஜனங்கள் கண்களை மூடி, தங்கள் மத்தியில் அவர் உலாவுவதை காணத்தக்க அளவிற்கு இயேசுகிறிஸ்துவின் பிரசன்னம் ஜனங்களிடத்தில் அவ்வளவு அசலானதாக காணப்படுவதாக. கர்த்தாவே, அதை அருளிச்செய்யும். 137. இப்போது, இன்றிரவில், நாங்கள் எதற்காக ஜெபிக்கிறோமோ அது நடப்பதற்கு முன்பாக... அன்புள்ள தேவனே, உம்முடைய பிள்ளைகளில் சிலர் வியாதியுள்ளவராய் இருக்கின்றனர். அவர்கள் காயமுற்றிருக்கிறார்கள், மேலும் – அவர்கள் அடிபட்டுள்ளனர். அவர்களுக்காக ஜெபிப்பதற்காக நான் வந்துள்ளேன். இன்றிரவில், அவர்கள் வியாதிகளினிமித்தம், கர்த்தாவே, நான் உம்மிடம் கேட்டுக் கொள்வதை கனப்படுத்துவீரா? உம்மையே நம்புகிறேன், இந்தக் கூட்டம் முடிவடையும்போது இந்தக் கட்டிடத்தில் எந்தவொரு பலவீனமுள்ளவனும் இல்லாதிருப்பார்களாக. 138. இங்கு எல்லாவிடங்களிலும் உம்முடைய ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் சத்தமிட்டு துதித்தும், அவர்களின் கைகளை உயர்த்தியும், மேடையில் இங்கே பின்னால் அமர்ந்து, வார்த்தைக்கு “ஆமென்” என்று கூறிக் கொண்டும் இருக்கின்றனர். பிதாவே, நாங்கள் ஒரே ஐக்கியத்தின் ஜனங்களாய் இருக்கிறோம். நாங்கள் உலகத்தை விட்டு பிரிந்து வந்துள்ளோம். குளிர்ந்துபோன, பாரம்பரிய நிலையிலிருந்து வெளியே வந்துள்ளோம். நாங்கள் ஆவியினால் பிறந்தவர்களாயிருக்கிறோம். இந்த இரவில் நாங்கள் ஜீவிக்கிறோம். நீர் ஜீவிப்பதினாலே நாங்களும் ஜீவிக்கிறோம் என்று நீர் கூறியிருக்கிறீர். கர்த்தாவே, நாங்கள் நம்புகிறோம், வார்த்தையின்படியாக, உம்மில் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறோம் என்று நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறோம். 139. இன்றிரவில், அவர்களுக்காக நான் ஜெபிக்கும் போது, வியாதியஸ்தரை சுகமாக்கும்படி உம்முடைய வார்த்தையை நிஜமாக்கும், வியாதியஸ்தரை சுகமாக்கும், மற்ற இவர்களும் ஜெபிக்கிறார்கள். கர்த்தாவே அருளிச் செய்யும், அது அவ்வாறே ஆகும். அதற்காக உம்மை நாங்கள் துதிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் ஆமென். 140. இப்போது... [யாரோ ஒருவர் அந்நியபாஷையில் பேசுகிறார், ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.] பிதாவாகிய தேவனே உமக்கு நன்றி. 141. பரிசுத்த வேதாகமத்தில் ஒருமுறை நடந்ததுபோல நாங்கள் உணர்கிறோம், அவர்கள் அங்கே கடினமான நேரத்தைக் கொண்டிருந்தார்கள், கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதன்மேல் இறங்கினார், எங்கே பகைவனைத் தோற்கடிக்க வேண்டும் என்று அவர் அவனிடத்தில் கூறினார், எங்கே செல்ல வேண்டும் என்று கூறினார். அதற்குச் செவிகொடுங்கள். உங்களைச் சரிபடுத்திக் கொள்ளுங்கள். பாருங்கள், உங்களுக்குள் இருக்கும் ஜீவ ஆவியானது, வார்த்தைக்கு உங்களை சீர்படுத்தும். பாருங்கள், வார்த்தை உங்களுக்குள் ஜீவிக்குமானால், சரியாக வார்த்தையின் மூலமாக தன்னில்தானே அது ஜீவிக்கும். 142. இப்போது, கடந்த இரவு நான் சற்று தாமதமாகும்படி நேர்ந்தது. இப்போது, நீங்கள் மிகவும் நல்ல ஜனங்கள், நான் சற்றே... நான் வயதானவனாகக் காணப்படுகிறேன், நான் முதுமை அடையத் தொடங்கிவிட்டேன், நான் – நான் – நான் நான் விரும்புகிறேன்... வேறொரு தேசத்தில் நான் உங்களுடன் நிச்சயமாக இருப்பேன். 143. ஆகவே, இப்போது நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். கடந்த இரவில் நான் செய்ததைப் போன்று ஒரே நேரத்தில் அநேகரை அழைக்க முயற்சிக்க மாட்டேன். மேலும் இப்போது பில்லிபால் ஏராளமான ஜெப அட்டைகளைக் கொடுத்துள்ளார், அது நூறு அட்டைகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். நூறு அட்டைகளை கொடுத்து உள்ளாயா அல்லது இருநூறு அட்டைகளா? இருநூறு அட்டைகள். அவைகள் என்ன? C - வரிசை. 144. C- வரிசையில் எண் ஒன்று யார் வைத்துள்ளீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்போது அது சரியாயிருந்தால், நாங்கள் பார்க்கட்டும், ஜெப அட்டை, உங்களுடைய ஜெப அட்டையைப் பாருங்கள், அதில் எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு - அதில் ஒரு எழுத்து இருக்கும். C - எண் ஒன்று, உங்கள் கரத்தை உயர்த்துங்கள். மேல் பகுதியில், நல்லது கீழே இறங்கி இங்கு வாருங்கள். எண் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. இப்போது, மேலும் நீங்கள் யாராவது அங்கே சென்று அவர்களை இங்கே கொண்டு வாருங்கள். இப்போது ஜெப அட்டை வைத்திருப்பவர் ஒவ்வொருவரும், ஆனால் அவர்கள் இந்தப் பக்கம் வந்து ஒரு வரிசையில் நிற்கவேண்டும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. அவர்களில் நான் மூன்று பேரைக் காண்கிறேன். ஐயா, உங்கள் ஜெப அட்டையை குறித்து என்ன? நான்கு. இப்போது அங்கு வேறொருவர் இருக்கிறாரா? ஐந்து, அங்கே வந்து கொண்டிருக்கிறாரே அவரா? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, C- எண் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. சரி இப்போது, உங்கள் எண்களை குறிப்பிட்டு அழைக்கும்போது வாருங்கள். 145. ஆகவே, கடந்த இரவு, ஜனங்கள் மிகுந்த கூட்டமாக இருந்ததை நான் அங்கே பார்த்தேன். நாம் அதை விரும்புவதில்லை. இது ஒரு சபை, நீங்கள் அறிந்துள்ளீர்கள், பொது விளையாட்டு நடக்கும் அரங்கம் அல்ல. ஆகவே நாம் – நாம், நீங்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்கவேண்டும். 146. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. அவர்கள் பின்னால் செல்லும்போது ஒரு வரிசையை ஒழுங்குபடுத்துங்கள். இப்போது, ஜெப அட்டை ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. யாராவது ஒருவர் அவர்களின் கரங்களைப் பற்றிக் கொள்ளுங்கள், அவர்கள் பெற்றுக்கொள்ளும் போது... அவர்கள் அங்கே வரிசையில் நிற்கும்போது. நாம் அவர்களுக்காக ஜெபிக்கப் போகிறோம் 147. இப்போது கர்த்தராகிய இயேசு ஒரு மகத்தான கிரியையை செய்யப் போகிறார் என்று என்னுடன் கூட எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். இப்போது ஆறு, ஏழு; ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து. 148. இப்போது சுற்றிலும் வாருங்கள், ஆகவே ஒரே இடத்தில் எல்லோரும் கூட்டமாக இருக்க வேண்டியதில்லை, சுற்றிநில்லுங்கள். அதன் காரணமாகவே உங்களுக்கு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் வரிசையில் நிற்கும்படி, நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள். அப்படியே கடைபிடியுங்கள், ஆகவே நெருக்கம் இருக்காது... பின்பு உங்கள் எண் அழைக்கப்படும் போது, நல்லது நீங்கள் வாருங்கள். எல்லாம் சரியே. இப்போது நாம் விரும்புகிறது என்னவென்றால்... 149. இப்போது எல்லோரும், ஒவ்வொருவரும் உண்மையான பயபக்தியுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அதற்காக ஜெபிப்போம், இந்த ஜனங்கள் ஜெபிக்கப்படும் வரைக்குமாக நாம் ஜெபத்தில் இருப்போம். கர்த்தர் என்ன செய்வார் என்று நாம் அறியாதவர்களாய் இருக்கிறோம். அவர் என்ன செய்யப்போகிறார் என்று நமக்கு தெரியாது. ஆனால் அவர் மகத்தான பெரிய கிரியைகளைச் செய்வார் என்று எதிர்பார்த்தவர்களாயிருக்கிறோம். 150. இப்போது, பதினைந்து என்று நம்புகிறேன், அத்தனை பேரும் அங்கே உள்ளார்களா? பில்லிபால் எங்கே இருக்கிறாய்? சரி. பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது. 151. இப்போது பாருங்கள், அவர்கள் ஏற்கனவே ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டுள்ளனர். ஆகவே, நான் இப்போது, சில சகோதரர்களை உதவிக்கு அழைக்கப் போகிறேன், ஒருவேளை, கீழே இருந்து கடைசிவரை, வரிசையில் வரும் வரையிலும், அவர் அடுத்தடுத்த எண்களை அழைப்பார். நீங்கள் பாருங்கள், ஆகவே எல்லோரும் நிற்க வேண்டியதில்லை, அவர்களுக்காக – வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்போது நீண்ட நேரம் நிற்கத் தேவையில்லை. சரி. இப்பொழுது, நாம் – நாம்... நான் விரும்புவது – நீங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புவது... 152. அவர்கள் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்தும் போது, நான் உங்களிடம் பேச விரும்புகிறேன், ஆகவே அவர்கள் நெருக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. 153. இப்போது, உங்கள் எண் அழைக்கப்படும் வரை ஒருவரும் வரவேண்டியதில்லை. நாம் பதினைந்துவரை அழைத்தோம் அல்லது இருபதுவரை என்று நம்புகிறேன், அதனுடன் கொஞ்சம் சேர்த்து, நான் இருபதுவரைக் கூறுவேன், அதற்குப்பிறகு நாம் சற்று காத்திருப்போம். இப்போதைக்கு அந்த இடத்தில் எத்தனைபேர் இருக்கிறார்களோ அது மட்டும் போதுமானதாக இருக்கும். 154. இப்போது அங்கே எத்தனை அட்டைகள் இருக்கின்றன? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஜெப அட்டை இல்லாதவர்கள் எத்தனை பேர்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். 155. இப்போது ஞாபகம்கொள்ளுங்கள், நீங்கள் ஜெப அட்டை வைத்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இங்கே நாம் இரண்டு இரவுகளாக இருக்கிறோம், ஒவ்வொரு இரவும், பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தினரிடையே சென்று ஜனங்களைச் சுகப்படுத்தினார் ஜெப அட்டைகள் இல்லாமலேயே. அது சரியா? ஜெப அட்டை என்பது ஒரே ஒரு காரியத்தை மட்டுமே உங்களுக்குச் செய்கிறது, நீங்கள் வரிசையில் வருவதற்கு உதவி செய்கிறது. அது சரியே. ஆனால் நீங்கள் விசுவாசமுடையவர்களாய் இருங்கள். பரிசுத்த ஆவியானவர் சரியாக இங்கே மேடையை விட்டு அங்கே இருக்கிற கூட்டத்தினரிடையே செல்கிறதை நீங்கள் கவனிக்கிறீர்கள். அது உண்மை என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? [சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் – மொழிபெயர்ப்பாளர்.] 156. இப்போது, நான் - நான் விசுவாசிக்கிறேன், உறுதியாக விசுவாசிக்கிறேன், பெந்தெகொஸ்தே சபையை தவிர்த்து வேறு எதாவது சபை இருக்குமானால், நான் அங்கு செல்வேன். எதாவது சிறந்தது ஒன்று இருக்கும் என்று நான் எண்ணினால், அவர்களுடன் போகக்கூடும், மேலும் விசுவாசிக்கக் கூடும் நான் அதனுடன் இருப்பேன். ஸ்தாபனங்களைக் குறித்து ஏதாவது நான் பேசுவதை நீங்கள் கேட்கும்போது, அது போன்ற காரியங்களை நீங்கள் கேட்கும்போது, நான் ஜனங்களுக்கு விரோதமானவன் இல்லை. அது ஏனென்றால்... 157. நீங்கள் நேசிக்கிற ஒரு மனிதன் நீர்வீழ்ச்சியை நோக்கி படகை ஓட்டிக் கொண்டிருக்கிறான், படகு அவனுடன் சேர்ந்து மூழ்கப்போகிறது என்பதை நீங்கள் அறிந்திருந்தும், நீங்கள் “நல்லது, நான் அவனை நேசிக்கிறேன், ஆனால் அவன் - அவன் தனக்கென்று சொந்த வழியை உடையவனாய் இருக்கிறான்” என்று கூறுவீர்களா? இல்லை, நான் அதைச் செய்யமாட்டேன். அப்படிப்பட்ட காரியம் என்னிடத்தில் இல்லை. அங்கிருந்து அவனை மீட்க, நான் சத்தமிடுவேன், ஓடிச்சென்று அவனைத் தூக்குவேன், அவனை உலுக்குவேன், அவனுக்கு அதிர்ச்சி கொடுப்பேன், அல்லது வேறெதாவது, என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வேன், பாருங்கள். 158. நீர்வீழ்ச்சியில் அது மிதக்காது என்று நான் அறிவேன். அது சரியே. உறுதியான எந்தவொன்றையும் போல, அது கிறிஸ்துவினிடத்தில் திரும்பி வரவேண்டும். அது தேவனிடத்தில் திரும்ப வரவேண்டும். இப்போது நான் – நான்... 159. இங்கு இருக்கிற ஒவ்வொருவரும் ஏற்கனவே என்னுடைய கூட்டத்தில் இருந்திருக்கிறீர்கள், அது சரியா? நீங்கள் அவ்வாறு கூட்டங்களில் இருந்திருந்தால் கரங்களை உயர்த்துங்கள். நல்லது அப்படி இல்லாமல் யாராவது... 160. இதற்குமுன் என்னுடைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், புதிதாக வந்துள்ளவர்கள் யாராவது இருக்கின்றனரா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்... நான் ஒருபோதும்... இதுதான் முதன் முதலாக நீங்கள் கலந்து கொள்ளும் என்னுடைய கூட்டமா? மறுபடியும் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது, நான்-நான்-நான் உங்களுக்குக் கூறுகிறேன், நான்... 161. இந்தக் காரியங்களை நான் மாற்றிக் கொள்வது நல்லது. [ஒரு சகோதரன், “உங்களுடைய ஊழியத்தைக் குறித்து சுருக்கமாக விளக்கிச் சொல்வீர்களா?” என்று கேட்கிறார்- ஆசி.] நல்லது, நான்- நான் விளக்கிச் சொல்கிறேன். 162. நீங்கள், புதிதாக உள்ளே வந்த ஜனங்களாகிய உங்களிடம் தான்... நான்... சொல்லப்போகிறேன்... அது என்னை சில நிமிஷங்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும்படிச் செய்யும். நான் அதை விளக்கிக்கூறட்டும், ஏனென்றால் தவறாய் புரிந்து கொண்டவர்களாய் நீங்கள் போக நேரிடும், பாருங்கள். 163. தேவனின் ஒவ்வொரு செயலையும் நான் விசுவாசிக்கிறேன். கடைசி நாட்களில், அது அப்படியாய் இருக்கப் போகிறது, மீண்டும் வருகிறது, அது வெளியே சென்றபோது இயேசு விட்டுச் சென்ற அதே ஒழுங்கில் சபையானது வரவேண்டியதாயிருக்கிறது என்று வேதாகமம் நமக்கு வாக்குரைக்கிறது என்று விசுவாசிக்கிறேன். பாருங்கள், அது மணவாட்டி ஆகும், அது மறுபடியும் அதன் ஸ்தானத்திற்கு வரவேண்டும். இப்போது, நாம் தேவனுடைய மகத்தான கிரியைகள் வழியாக கடந்து வருகிறோம், நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்தாவியின் அபிஷேகம், வரங்கள் திரும்ப அளிக்கப்படுதல் வழியாக. ஆனால் ஆபிரகாமின் பாதையில் பயணிப்பதில்... 164. இப்போது நான் கல்வி அறிவில்லாதவன், ஆகவே யோவான் ஸ்நானகனைப் போல ஏதாவதொன்றைப் பயன்படுத்த வேண்டும். அவனும்கூட கல்வி கற்காதவன். ஒன்பது வயதாய் இருக்கும்போது அவன் வனாந்திரத்திற்குச் சென்றான், அவன் ஒருபோதும் கற்றதில்லை. ஆகவே அவனுடைய பிரசங்கம் பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்தது, “ஓ, விரியன் பாம்பின் குட்டிகளே” என்பது போல. பாருங்கள், அவன் பார்த்ததிலேயே மிகவும் மெலிதான மிகவும் மோசமான காரியம் அதுதான். ஆசாரியர்களைப் பார்த்து “பாம்புகளே” என்றழைத்தான். அவன், “விரியன் பாம்பின் குட்டிகளே! வரும் கோபாக்கிணைக்குத் தப்புவித்துக் கொள்ள உங்களை எச்சரித்தது யார்?” என்று கேட்டான். “நாங்கள் இதைப் பெற்றிருக்கிறோம், நாங்கள் இன்னார், இந்தக் குழுவைச் சார்ந்தவர்கள்” என்று சொல்லாதீர்கள். “தேவன் இந்த கற்களை மாற்றக்கூடிய வல்லமையுள்ளவர்” என்றான். நதிக்கரையில் அவன் பார்த்தது அவைகள்தான், “ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவர்.” மேலும் கோடாரியைப் பற்றியும் பேசினான். வனாந்திரத்தில் அவன் பயன்படுத்தியது அதுதான், “வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது. நல்ல கனிகொடாத மரம் எல்லாம் வெட்டுண்டு போகும்” என்றார். அவ்விதமாக அவன் அந்த மரங்களை வெட்டி எரிப்பதற்கு பயன்படுத்தினான். ஆனால் நல்ல மரங்களையோ... நீங்கள் பாருங்கள். அவன்- அவனுடைய பிரசங்கங்களை அவ்விதமாகச் செய்தான். மத்.3:7-10 165. ஆகவே, இதில் – இவ்விதமாக நான் பேச விரும்புகிறேன். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம், அறுவடையின் நேரம். 166. இப்போது, ஆபிரகாமின் பயணத்தின்போது, தேவனை வெவ்வேறு ரூபத்தில் அவன் சந்தித்தான். இன்னும் அதுபோன்ற காரியங்கள், நம்மால் அதை எடுக்க முடியும், எடுத்துக் காண்பிக்க முடியும். நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால், நாம் ஆபிரகாமின் வித்தாக இருக்கிறோம். ஈசாக்கு உண்மையிலேயே அவனுடைய – அவனுடைய சிறிய குமாரனாயிருந்தான்; மாம்சப் பிரகாரமாக அவன் அவனுடைய குமாரன் தான். இருப்பினும் ஆவிக்குரியபடி, கிறிஸ்துவே ஆபிரகாமின் சந்ததியாக இருந்தார். அவனுடைய இராஜரீக சந்ததி, அவனுடைய விசுவாசத்தின் இராஜரீக சந்ததி. 167. இப்பொழுது அவருடைய இராஜரீகவித்து, அதே பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது, அது என்னவென்றால், கிறிஸ்துவின் மணவாட்டி ஆபிரகாம் பயணித்த அதே பாதையில் சென்று கொண்டிருக்கிறாள். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பாக ஆபிரகாம் பார்த்த கடைசி அடையாளமானது, தேவன் மனித சரீரத்தில் வெளிப்பட்டதாயிருந்தது. இரண்டு தூதர்கள் இறங்கி வந்தார்கள். ஆதி.19:1 168. இயேசு பரிசுத்த லூக்கா எழுதின சுவிசேஷம் 17-ஆம் அதிகாரம், 30-வது வசனத்தில் “நோவாவின் காலத்தைப் போல” என்று கூறியுள்ளார். அவர் நோவாவின் காலத்தைப் பற்றிச் சொன்னார். மேலும் அவர், “சோதோமின் நாட்களில் நடந்ததைப் போலும் நடக்கும்” என்றார். பாருங்கள், அவருடைய வருகை. “மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களிலும் அதேபோல் நடக்கும்” என்றார். இப்பொழுது, வெளிப்படுத்தப்பட்டது “தேவனுடைய குமாரன்” என்று ஒருபோதும் அவர் கூறவில்லை, “மனுஷகுமாரன்!” மத்.24:37, லூக்.17:26-30, 169. இப்போது, இயேசு மூன்று நாமங்களில் வந்தார். மனுஷகுமாரன் – அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்; தேவனுடைய குமாரன் – அது சபையின் காலங்கள் தோறும் சென்றது. பின்னர் தாவீதின் குமாரன். ஆனால் தேவனுடைய குமாரன் மற்றும் தாவீதின் குமாரன் என்பதற்கு இடையில், அவருடைய சொந்த வார்த்தையின்படி, மல்கியா தீர்க்கதரிசியின் புத்தகம் 4-வது அதிகாரம் மற்றும் அநேக வேத வாக்கியங்களின்படியும், அவர் தம்முடைய சபைக்கு திரும்பிவர வேண்டும், மாம்ச ரூபத்தில், ஜனங்களுக்குள், ஒரு... மனித சரீரத்தில், ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டிய வழியில் வரவேண்டும். பாருங்கள்? 170. ஆபிரகாமை சந்திக்க வந்தபோது, இந்த மனிதன் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். முதலாவது காரியம், ஆபிரகாமிடம் அவனுடைய பெயர் மாற்றப்பட்டதைக் குறித்துச் சொன்னார். ஏனென்றால் அவர் அவனை ஆபிராம் என்று அழைக்கவில்லை, அவர் அவனை ஆபிரகாம் என்று அழைத்தார். அவர் அவ்வாறு செய்தபோது, ஏன், நாம் பார்க்கிறோம் – அவர், “உன் மனைவி சாராள் எங்கேயிருக்கிறாள்” என்று கேட்டார். சா-ரா-ள்; சா-ரா-ய் என்றில்லை. ஆதி.17:5&15 171. “ஏன்,” அவன், “அவள் உமக்குப் பின்னால் கூடாரத்தில் இருக்கிறாள்” என்று கூறினான். 172. இப்பொழுது அவர் கூறினது... அவள் தொண்ணூறு, வயதும் ஆபிரகாம் நூறு வயதுடையவனுமாயிருந்தான், அவர், “இப்பொழுது, வாக்குதத்தம் செய்தபடி நான் உன்னைச் சந்திப்பேன், ஒரு உற்பவ காலத்தில்” என்று கூறினார். 173. சாராள் உள்ளேயிருந்து, அவர் பேசுவதை கேட்டாள், கூடாரத்தின் சுவர் வழியாக கேட்டு, தனக்குள்ளே சிரித்தாள். மனித ரூபத்தில் அங்கு உட்கார்ந்திருந்த அந்த தூதன், பின்னால் இருந்த ஆவியைப் பகுத்தறிந்தார், “இந்தக் காரியங்களைச் சொல்லும்போது சாராள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். 174. நல்லது, உடனே சாராளை அழைத்தார்கள், அவள் அதை மறுத்தாள். அவர், “ஆனால் நீ அதைச்செய்தாய்” என்றார். அவள் பயமடைந்தாள். ஆதி.18:9-15 175. இப்போது இயேசு கூறினார், தேவனுடைய குமாரன் வருவதற்கு முன்பு, அல்லது மனுஷ... இரண்டாம் வருகையில், நாம் வாழ்கிற இந்தக்காலத்தில்... 176. அவர் மனுஷகுமாரனாக வந்தார், ஒரு தீர்க்கதரிசியாக, ஏனென்றால் அது வேத வாக்கியத்தின் நிறைவேறுலாக இருந்தது. மோசே, “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்" என்று கூறினான். அது இயேசு என்று நாம் அனைவரும் அறிவோம். நாம் அறிந்திருக்கிறோம் இல்லையா? ஆகவே வேதவாக்கியத்தின்படி அவர் வரவேண்டியதாயிருந்தது – ஒரு தீர்க்கதரிசியாக. அவர் ஒருபோதும் தன்னை “தேவனுடைய குமாரன்” என்று அழைத்துக் கொள்ளவில்லை; மனுஷகுமாரன் என்றே தன்னை அழைத்துக் கொண்டார். உபா.18:15 177. ஆனால் இப்பொழுது அவர், இப்போது சபைக் காலங்கள் ஊடாக, அவர் தேவனுடைய குமாரனாக இருந்தார். ஆயிரம் வருட அரசாட்சியில் அவர் தாவீதின் குமாரனாக இருப்பார், தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருப்பார். ஆனால் அதற்கிடைப்பட்ட காலத்தில், வேதவாக்கியங்கள் மூலமாக, அவர் மறுபடியும் மனுஷகுமாரனாக தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் பார்க்கிறோம், ஒரு தீர்க்கதரிசி. 178. ஏனென்றால், கர்த்தருடைய வார்த்தையானது தீர்க்கதரிசிகளிடத்தில் மட்டுமே வரும், இறையியல் கற்றவர்களிடத்தில் வராது. அது தீர்க்கதரிசிகளுக்கே உரியது. முதலாவது அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு அறிவிக்காமல் அவர் ஏதுவுமே செய்ததில்லை என்று கர்த்தர் சொன்னார். அவருடைய மாறாத வார்த்தையில் நாம் சற்று அதைக் குறித்துப் பேசினோம். கடைசிக் காலத்தில், பரிசுத்த வேதாகமத்தில் முத்திரிக்கப்பட்டுள்ள ஏழு முத்திரைகளும், கிறிஸ்துவைக் குறித்த ஏழு வகையான எல்லா இரகசியங்களும், முதலாவது வெளிப்படுத்தப்பட வேண்டும், அது ஒரு தீர்க்கதரிசியால் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும். பல வருடங்களாக, அதற்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இப்பொழுது அவருடைய ஆவி நம் மத்தியில் இருக்கிறது என்று நாம் விசுவாசிக்கிறோம், ஆகவே நாம் காண்கிறோம். ஆமோஸ் 3:7 179. இப்போது கவனியுங்கள், இயேசு வந்தபோது, அந்த அபிஷேகம் பெற்ற ஒருவர், மேசியா என்று தன்னை நிரூபிப்பதற்காக அவர் என்ன செய்தார்? ஒரு நாள், அவர் பெற்றுக் கொண்ட பிறகு... பிதா இறங்கி வந்து அவருக்குள் வாசமாயிருந்தார், புறாவின் ரூபத்தில் வானத்திலிருந்து இறங்கி வந்து, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் வாசமாய் இருக்க நான் பிரியமாயிருக்கிறேன்” என்றார். மத்.3:17, மாற்.1:11, லூக்.3:22 180. அதன் காரணமாக அவர், “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா என்னில் வாசமாயிருக்கிறார்; நான் அல்ல, என்னில் வாசமாயிருக்கிற பிதாவே அந்த கிரியைகளைச் செய்கிறார்” என்றார். யோ.10:30& 14:10 181. யோவானும் அதைக் குறித்து சாட்சி கொடுத்தான். புறாவின் வடிவத்தில் தேவனுடைய ஆவியானவர் இறங்கி வருவதைப் பார்த்தான். அதிலிருந்து ஒரு சத்தம் வந்தது, “இவர் என் நேசகுமாரன், இவரில் வாசமாயிருக்க நான் பிரியமாயிருக்கிறேன்” என்று சொல்லிற்று. பாருங்கள், அவர் அவரில் வாசமாயிருந்தார். யோ.1:32-33, மத்.3:17 182. இப்போது கவனியுங்கள், அவருடைய ஊழியம் தொடங்கினபோது, அவர் மனுஷகுமாரனாக கிரியை செய்ய வேண்டியதாயிருந்தது. இப்போது அவர் என்ன செய்தார் என்று கவனியுங்கள். சீமோன் பேதுரு என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் அவரிடத்தில் வந்தான். அப்பொழுது அவன் பெயர் சீமோன் என்பதாக இருந்தது, பின்னர் அவன் பேதுரு என்று அழைக்கப்பட்டான். அந்திரேயா யோவானுடைய கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தான்; பின்னர் இயேசு வந்தபோது, யோவான் அவனை அறிமுகப்படுத்தினான், அவன் அவரைப் பார்த்தான். மேலும் அந்திரேயா அவனுடைய சகோதரனாகிய சீமோனை, தன்னுடன் கூட்டத்திற்கு வரும்படி அழைத்தான். 183. அவர்களுடைய தந்தையார் அவனிடம் கூறியிருந்தார், “ஒரு நேரம் வரும், உண்மையான மேசியா வருவதற்கு முன்பாக, போலி மேசியாக்கள் அநேகர் எழும்புவார்கள்” என்று கூறியிருந்தார். அது எல்லா காலங்களிலும் அவ்வாறே நடந்து வந்துள்ளது. அவர், “பிள்ளைகளே ஞாபகம் கொள்ளுங்கள், உண்மையான மேசியா, அவரை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஏனென்றால், அவர் வேத வார்த்தையின்படி இருப்பார். அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பார். மல்கியாவின் காலத்திலிருந்து, நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான வருடங்களாக நாம் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், அநேக ஜனங்கள் அந்த ஸ்தானத்தை உரிமை பாராட்டுவார்கள், ஏற்கனவே அவ்வாறு இருந்ததை நாம் அறிந்துள்ளோம்; இயேசு என்ற பெயரைக் கொண்ட ஒருவன் எழும்பி, ஒரு கூட்ட ஜனங்களை தன் பக்கமாக இழுத்தான், அவ்விதமாக அநேகர் செய்தனர். ஆனால் இந்த உண்மையான மேசியாவோ ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பார்” என்று கூறினார். தீர்க்கதரிசிகள் என்ன கூறுகிறார்களோ அதுவே சத்தியம் என்று நம்பும்படியாக எபிரேயர்கள் அனைவரும் கற்பிக்கப்பட்டிருந்தார்கள். 184. [ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.] உடனடியாக அந்த கல்வியறிவற்ற மீன்பிடிப்பவன், தன்னுடைய கையெழுத்தைப் போடுவதற்குக் கூட போதுமான கல்வி அறிவில்லாதவன் என்று கூறப்பட்ட அவன், பரிசுத்த வேதாகமம் அவனைக்குறித்து, “அவன் படிப்பறியாதவன் என்றும் பேதமையுள்ளவன்” என்றும் கூறுகிறது, அப்படிப்பட்ட அவன் தேவனுடைய குமாரனை உடனே அடையாளம் கண்டுகொண்டான். அவர் மேசியாவாக இருக்க வேண்டும் என்று அவன் அடையாளம் கண்டு கொண்டான், ஏனென்றால், அங்கே ஒரு தீர்க்கதரிசி இருந்தார். அவனுடைய பெயர் என்ன என்பதையும், அவனுடைய தகப்பனாருடைய பெயர் என்ன என்பதையும் கூறின ஒருவர் அங்கே இருந்தார். அப்பொழுது, அவர் ஒரு தீர்க்கதரிசியாக தான் இருக்க வேண்டும் என்று அவன் புரிந்து கொண்டான், ஏனென்றால், அவர் அவனுக்கு அறிமுகமில்லாதவராக இருந்தார். மேலும், அவனுக்கு இராஜ்ஜியத்தின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. யோ.1:40-42, அப்.4:13 185. அங்கே சிலர் நின்றுகொண்டு அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், நாம் காண்கிறோம், அதில் பிலிப்பு என்னும் ஒருவன், தன்னுடைய நண்பன் நாத்தான்வேல் என்பவனோடு வேதபாட ஆராதனையை கொண்டவனாயிருந்து, மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மலையைச்சுற்றி ஒருநாள் பிரயாண தூரம் சென்று திரும்பி வந்திருந்தான். பின்னர் ஒரு – ஒரு அத்திமரத்தின் கீழ் ஜெபம் செய்து கொண்டிருப்பதை அவன் கண்டான். அவன், நாத்தான்வேலிடத்தில், “வந்து பார், நாங்கள் யோசேப்பின் குமாரனும், நாசரேத் ஊராராகிய இயேசுவை கண்டோம்” என்று கூறினான். ஆகவே, நாத்தான்வேல்... அல்லது பிலிப்பு அல்லது... 186. நாத்தான்வேல், அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தான். அவன் “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாக கூடுமோ?” என்று கேட்டான் அதற்கு அவன், “நல்லது, வந்து பார்” என்றான். 187. இப்போது, அது ஒரு சிறந்த ஆலோசனை. வந்து, நீயே பார். வீட்டில் தரித்திருந்து குறை கூறிக் கொண்டிருக்காதே. வந்து, கண்டுகொள். இயேசு, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே” என்றார். யோ.5:39 188. ஆகவே, அவர்கள் திரும்பி வருகிற வழியிலே, சந்தேகத்துக்கு இடமின்றி, அவர்கள் சிறிதே உரையாடல்களைக் கொண்டிருந்தனர். அவன் அவனிடத்தில், அந்த முதிர்வயதுடைய மீனவனை அறிந்திருக்கிறாயே, அன்றொருநாள் நீ வாங்கின மீன்களுக்கு கொடுக்கப்படும் ரசீதில் கையெழுத்துகூடப் போடத் தெரியாமல் இருந்தான். அவனுடையத் தகப்பனார் அங்கே இருக்கிற அந்த சபையில் இருந்தார். அவனுடைய பெயர் யோனா. உனக்கு ஞாபகம் உள்ளதா? ஆகவே, அவன் - அவன்- அவன் இன்னான் என்பதை அவனிடம் அவர் கூறினார் என்றான். “ஓ, நான் அதை பார்க்கட்டும்.” 189. ஆகவே, அவன் நடந்து செல்கையில், ஒருவேளை அவன் ஜெப வரிசையில் நின்று கொண்டிருக்க வேண்டும், அங்கே இயேசு இருந்தார். எனக்குத் தெரியவில்லை. அவன் இயேசுவின் பிரசன்னத்திற்கு நடந்துசென்றான். இயேசு அவனை நோக்கிப் பார்த்தார், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று கூறினார். 190. இப்போது, முதலில் நீங்கள் கூறுவது, “அவன் இஸ்ரவேலன் என்பது அவருக்கு எப்படித்தெரியும்? நல்லது, ஏனென்றால் அவன் இஸ்ரவேலைப் போல ஆடை அணிந்திருந்ததாலேயா?” என்று நீங்கள் கூறலாம். இல்லை, இல்லை. 191. கிழக்கத்தியர் அனைவரும் அவ்வாறு தலைப்பாகை அணிந்திருப்பார்கள். அவர்கள் ஒன்றுபோல உடையணிவார்கள். மேலும், “ஒரு இஸ்ரவேலன்” என்றார். 192. மேலும் அவர், “அவனிடம் கபடம் இல்லை!” என்றார். அவன் கோணலான மனம் கொண்டவனாகவோ அல்லது வேறேதாவதாகவோ இருந்திருக்கக்கூடும், அப்படியிருந்தால் அவ்விதமாக அவன் வெளிக்காட்டப்பட்டிருப்பான். அவரோ, “அவனிடத்தில் ஒரு கபடும் இல்லை!” என்றார். 193. அந்தச் சொல்லானது, நாத்தான்வேலிடத்தில் இருந்த இறுக்கமான தன்மையை எடுத்துப்போட்டது, ஆகவே அவன், “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?” என்றான். ஏன், நான்- நான்- என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. என்னை எப்பொழுது அறிந்தீர்? நான் ஒருபோதும் உம்மை சந்தித்ததில்லையே. நான் பிலிப்புவால் அழைத்துக் கொண்டுவரப்பட்டேன். நீர் எப்பொழுது என்னை அறிந்தீர்?” 194. அதற்கு அவர், “நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போதே, அங்கே நீ ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கும்போது, நான் உன்னைக் கண்டேன்” என்றார். ஆம், பாருங்கள்? 195. அவன், “ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் இராஜா” என்றான். 196. இயேசு, “இதைச் சொன்னதினாலேயா நீ விசுவாசிக்கிறாய்? இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்” என்றார். யோ.1:45-50 197. இப்போது, அங்கே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். இப்போது நான் உனக்கு சிறிது எச்சரிப்புக் கொடுக்கட்டும். அங்கே நின்று கொண்டிருந்தவர்களில், ரபீகளும் ஆசாரியர்களும் இருந்தார்கள். அவர்கள், “இந்த மனிதன் பெயல்செபூலினால் இதைச் செய்கிறான்” என்றார்கள். மத்.12:24, மாற்.3:22, லூக்.11:15 198. இயேசு திரும்பிப் பார்த்து, “அதற்காக உங்களை மன்னிக்கிறேன்” என்றார். ஏனென்றால் பாவநிவாரண பலி இன்னும் செலுத்தப்படவில்லை. “ஆனால் ஒரு நாளில் பரிசுத்த ஆவியானவர் வருவார், இதே கிரியைகளை அவரும் செய்வார்.” மேலும் அவர், “அதற்கு விரோதமாக பேசப்படும் ஒரு வார்த்தைகூட, ஒருபோதும் இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்பட மாட்டாது” என்று கூறினார். மத்.12:31, மாற்:3:28, லூக்.12:10 கிணற்றண்டையிலிருந்த அந்த சமாரிய ஸ்திரீயைக் குறித்து... 199. இப்போது, பூமியில் மூன்று வகையான இனத்தார்கள் இருக்கிறார்கள். நாம் கருப்பாக இருக்கலாம், பழுப்பு, மற்றும் மஞ்சள் நிறத்தவர்களாக இருக்கலாம், நாம் யாராக இருந்தாலும், நாம் ஒரு இரத்தத்தின் மூலமாக வந்துள்ளோம். மூன்று இனங்கள் உள்ளன, அது காம், சேம் மற்றும் யாப்பேத் இவர்களின் ஜனங்களே; அது யூதர்கள், புறஜாதிகள், மற்றும் சமாரியர்கள் – பாதி யூதன், பாதி புறஜாதி. ஆதி.9:18 200. இப்போது, நாம் புறஜாதிகள், ஆங்கிலோ-சாக்சன், (Anglo – Saxon: ஆங்கில முன்னோர்கள்), நாம் புறஜாதிகளாக விக்கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருந்தோம். நாம் எந்த மேசியாவையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. 201. ஆகவே இயேசு மனுஷகுமாரனாகத் தன்னை வெளிப்படுத்தும்போது... இப்போது உற்றுக் கவனியுங்கள். நான் முடிக்கப் போகிறேன். இயேசு வந்தபோது, அவர் என்னவாக இருப்பார் என்று தீர்க்கதரிசி கூறினாரோ அதைப் பிரதிநிதித்துவப்படுத்த அவர் கடமைப் பட்டிருந்தார். ஆகவே, இஸ்ரவேலருக்கு முன்பாக தன்னை பிரதிநிதித்துவப்படுத்தினார். பேதுரு மற்றும் நாத்தான்வேல் மற்றும் அங்கிருந்தவர்களுக்கு முன்பாக தன்னை மனுஷகுமாரனாக பிரதிநிதித்துவப்படுத்தினார். 202. இப்பொழுது அவர் சமாரியாவின் வழியாகப் போக வேண்டிய தேவை இருந்தது. அவர் சமாரியாவுக்குப் போகிறார். அங்கே ஒரு ஸ்திரீ கிணற்றண்டையில் உட்கார்ந்து இருப்பதை கண்டார். அந்தக் கதையை நாம் அறிவோம், அவர்கள் இருவரும் உரையாடினார்கள். அவள் தண்ணீர் மொள்ள வந்தாள். அவர், “தாகத்துக்குத் தா” என்றார். 203. அதற்கு அவள், “இங்கே பிரிவினை உண்டாயிருக்கிறது, நாம் இதைப் பெற்றுக்கொள்ள முடியாது. நான் சமாரிய ஸ்திரீயாய் இருக்கிறேன், நீரோ ஒரு யூதனாயிருக்கிறீர். நாம் சம்பந்தம் கலவாதவர்கள்...” என்றாள். 204. அதற்கு அவர், “ஆனால், நீ யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருந்தால், நீயே என்னிடத்தில் தாகத்திற்கு கேட்டிருப்பாய்” என்றார். 205. அதற்கு அவள், “நல்லது, கிணறும் ஆழமாயிருக்கிறது, பின்னே எதைக் கொண்டு தண்ணீர் மொள்ளுவீர்?” என்று கேட்டாள். 206. அவளுடைய ஆவியை அவர் தொடர்பு கொள்ளும் வரைக்கும் உரையாடல் தொடர்ந்தது. அவளுடைய ஆவியுடன் அவர் தொடர்பு கொண்டபோது, அவளுடைய பிரச்சனை என்ன என்பதை கண்டுகொண்டார். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? [சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி.] இப்பொழுது புதிதாக வந்துள்ள உங்களில் எத்தனை பேர் அது சத்தியம் என்பதை அறிவீர்கள்? [“ஆமென்”] அது சரியே, அதுவே சத்தியம். அவர் என்ன கூறினார்? “போய் உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டு வா.” அதற்கு அவள், “எனக்குப் புருஷன் இல்லை” என்றாள். 207. அதற்கு அவர், “சரியாய் சொன்னாய். எப்படியெனில் ஐந்து புருஷர்கள் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷன் அல்ல” என்றார். அவள் திரும்பிப் பார்த்தாள். 208. இப்போது, அவள் அந்த ஆசாரியர்களைப் போல இல்லை. “அவர் பிசாசுபிடித்தவர், அவர் ஒரு குறிசொல்லுகிறவர் அல்லது அதைப் போன்று ஒன்று,” இப்படியாக அவள் கூறவில்லை. 209. அவள் திரும்பினாள். மேலும் அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். இப்போது, நானூறு ஆண்டுகளாக ஒரு தீர்க்கதரிசியை நாங்கள் கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட காரியங்கள் சபையில் நடப்பது வழக்கம் இல்லை. ஆனால், நாங்கள் உணர்கிறோம், நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். இப்போது மேசியாவின் வருகைக்காக நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் அறிவேன். மேசியா வரும்பொழுது, அவர் செய்கிற காரியம் அதுவாக தான் இருக்கும்” என்று கூறினாள். யோ.4:4-25 210. இப்பொழுது பரிசுத்த வேதாகமம், “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறுகிறது. அந்நாளில் சமாரியர்களுக்கும் யூதர்களுக்கும் மேசியாவின் அபிஷேகிக்கப்பட்ட அடையாளமாக அது இருக்குமானால்... இப்போது, அது புறஜாதிகள் மத்தியில் ஒருபோதும் செய்யப்படவில்லை. பரிசுத்த வேதாகமத்தில் எந்த இடத்திலும், புறஜாதிகள் முன்பாக இயேசு எப்போதாவது செய்தார் என்பதாக அது காணப்படவில்லை. அவர்கள் நான்காயிரம் ஆண்டுகளாக மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்; நாமும் கூட, அவர்களுடைய பயிற்சியைக் கொண்டு, மேசியாவை எதிர்பார்த்த வண்ணமாக இரண்டாயிரம் ஆண்டுகளை பெற்றிருந்தவர்களாய் இருக்கிறோம். 211. இப்போது, அவர்களுடைய நாட்கள் முடிவடைவதற்கு சற்று முன்பாக, அது அவருடைய அடையாளமாக இருக்குமானால், அதுவே நமக்கும் அடையாளமாக இருக்கும். ஏனென்றால், மறுபடியும் உலகம் சோதோமைப் போல் ஆகும் நாட்களில் மனுஷகுமாரனாக தன்னை வெளிப்படுத்துவதாக அவர் வாக்களித்துள்ளார். நாம் அங்கே தான் இருக்கிறோம் என்பதை யாராவது அறிந்திருக்கிறீர்களா? பாருங்கள்? 212. இப்போது, இயேசுகிறிஸ்து ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றுகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அனைத்து வேதவாக்கியங்களும் ஊக்குவிக்கப்பட்டு எழுதப்பட்டது. அவைகளில் ஒன்று சரியானது, மற்றது தவறு என்பதல்ல, ஒரு வார்த்தையைக் கூட்டினாலோ அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையை நாம் எடுத்துப் போட்டாலோ நாம் கடிந்து கொள்ளப்படுவோம். வெளிப்படுத்தின விசேஷம் 22-ம் அதிகாரம் அவ்விதம் கூறுகிறது. அவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். வெளி.22:18 213. லுத்தரன்கள், அவர்களுடைய நாட்களில் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்காக அவர்களை நிச்சயமாக நான் கனப்படுத்துகிறேன். மெத்தடிஸ்ட், அவர்களுடைய நாட்களில் பரிசுத்தமாக்கப்படுதல் என்னும் செய்திக்காகவும், பெந்தெகொஸ்தேயினர், அவர்களுடைய நாட்களில் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்காகவும் அவர்களை நிச்சயமாக நான் கனப்படுத்துகிறேன். ஆனால் நாம் வேறொரு நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். தண்டுப்பகுதி, குஞ்சம் மற்றும் கிட்டத்தட்ட கோதுமை மணியைப் போலவே காட்சியளிக்கும் பதர் இருந்த நாட்களில் நாம் ஜீவித்து கொண்டிருந்தோம். ஆனால், கோதுமையானது பதருக்குள் இருக்கிறது. பதரானது கோதுமை மணி சூரிய (sun) வெளிச்சத்தில் கருகிபோகாமல் இருக்க அது வெறுமனே உதவியது. ஆனால் இப்பொழுது, (கோதுமைமணி) முதிர்ச்சியடையும் பொருட்டு, குமாரனுடைய (son) பிரசன்னத்தில் வைக்கப்படும் படியாக, ஸ்தாபனமானது அதிலிருந்து வெளியே இழுக்கப்படுகிறது. ஆகவே நாம் - நாம்... இனிமேல் ஸ்தாபனங்கள் எழும்பாது. இதுவே அதனுடைய முடிவாகும். எப்பொழுதும் மூன்று வருடங்களில், ஒரு செய்தி தொடங்கும்போது, அதை அவர்கள் ஸ்தாபனமாக உருவாக்கி விடுகிறார்கள். 214. இந்த செய்தியானது ஏறக்குறைய இருபது வருடங்களாகப் போய் கொண்டிருக்கிறது, ஸ்தாபனம் ஆகவில்லை, அது ஸ்தாபனம் ஆகமுடியாது. நாம் கோதுமை மணியின் காலத்தில், அறுவடையின் நேரத்தில் இருக்கிறோம். மகத்தான அறுவடை நெருங்கி வருவதை என்னால் உணர முடிகிறது (I can hear the great combine coming). ஒரு நாளில் நாம் பரம வீட்டிற்கு செல்லப் போகிறோம். “அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.” 215. இப்போது நான் அவரல்ல, ஆனால் நான் அவருடைய ஊழியக்காரன். நீங்கள் ஜனங்கள் மேல் கரங்களை வைத்து அவர்களுக்கு வரங்களைக் கொடுக்கிறீர்கள் என்பதை நான் நம்புவது கிடையாது. “வரங்களும், அழைப்பும் மனந்திரும்புதல் இல்லாமலேயே உண்டாகிறது.” காலத்தையும், அந்த காலத்தின் நேரத்தையும் சந்திக்கும்படி அவர்கள் தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள். எந்தவொரு வேதமாணாக்கரும் அது சத்தியம் என்பதை அறிவார்கள். மோசே சரியான நேரத்தில் பிறந்தான். எரேமியா மற்றும் அவர்கள் அனைவரும் சரியான நேரத்தில் தோன்றினார்கள். யோவான் ஸ்நானகன் சரியான நேரத்தில் வந்தான். இயேசுவும் சரியான நேரத்தில் வந்தார். நாமும் சரியான நேரத்தில் இருக்கிறோம். இதுதான் நடக்க வேண்டிய ஒன்றாகும். ரோ.11:29 216. இப்பொழுது, அவர் இன்று ஜீவிக்கிறவராக இருக்கிறார் என்று நான் உரிமை கோருகிறேன். அவருடைய ஆவி ஜீவிக்கிறதாய் இருக்கிறது என்று நான் உரிமை கோருகிறேன். சபைக் காலங்களுக்குப் பிறகு, கடைசி அழைப்பானது, நாம் லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக்கிறோம், அது மற்றெல்லாவற்றையும் விட மிகவும் மோசமானதாக இருக்கிறது, ஏனென்றால் அவர் சபைக்கு புறம்பாக்கப்பட்டார். ஞாபகங்கொள்ளுங்கள், மனுஷகுமாரன், அவர் சபைக்கு வெளியே போடப்பட்டுவிட்டார்; ஒரு ஸ்தாபனம் ஸ்தாபனத்திற்கு வெளியே என்றல்ல, ஆனால் ஒரு நபர் ஸ்தாபனத்திற்கு வெளியே. பாருங்கள்? ஏனைய சபைக் காலங்கள் அதைப் பெற்றிருக்கவில்லை, லவோதிக்கேயா மட்டுமே. நீங்கள் ஆவிக்குரியவர்களானால், நீங்கள் புரிந்து கொள்வீர்கள். 217. எங்கள் பரலோகப் பிதாவே, உம்மைக் குறித்து உண்மையாய் இப்போது நான் சாட்சிப் பகர்ந்தேன். இப்போது இது சத்தியம் என்றால், அது சத்தியம் என்று நான் அறிந்திருக்கிறேன், நான் அது உண்மையென்று விசுவாசிக்கிறேன், நான் சத்தியத்தை கூறி இருப்பேனேயானால், நான் சத்தியத்தை தான் கூறினேன் என்று நீர் சாட்சி பகரும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 218. நான் சற்றுநேரத்திற்கு, ஏதோ ஒன்றைக் கேட்கப் போகிறேன். ஜெப வரிசையில் பகுத்தறிதல் எதுவும் வேண்டாம் என்பதாக இருந்தேன், ஏனென்றால், நீங்கள் எல்லாரும் என்னுடைய ஊழியத்தில் இருந்திருக்கிறீர்கள் என நினைத்தேன். ஆனால் இங்கிருக்கிற இந்த ஜனங்களுக்காக, உங்களில் சிலர் ஜெபத்திற்காக அங்கே போகிறீர்கள், வேறு சிலர் வரிசையில் நிற்கிறீர்கள் அல்லது அதைப் போன்று நிற்கும் அவர்களுக்காக, இப்போது இயேசுகிறிஸ்து இந்த மனிதசரீரத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், நீங்கள் இல்லாமல் அது கிரியை செய்யாது. அதை செய்ய வைக்கும் ஒருவர் நீங்களே. 219. இப்பொழுது, கவனியுங்கள், ஒரு நாள், ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டாள், அவர் திரும்பி சுற்றும் முற்றும் பார்த்து, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். 220. அவர்கள் எல்லோரும், “ஏன், நீரே பார்க்கிறீரே...” என்றார்கள். அல்லது, பேதுரு, “ஏன் கூட்டத்தார் அனைவரும் உம்மைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்களே” என்றான். 221. அதற்கு அவர், “ஆனால், நான் பலவீனம் அடைந்ததை உணர்கிறேன், அல்லது வல்லமை என்னிடத்திலிருந்து புறப்பட்டு சென்றது” என்றார். வல்லமை என்றால் “பலம்” என்று பொருள். மேலும் அவர், “நான் உணர்கிறேன், அதாவது – நான் பலவீனம் அடைந்துவிட்டேன்” என்றார். 222. ஆகவே, அவர் அவளைக் கண்டுபிடிக்கும் மட்டுமாக சுற்றிலும் பார்த்தார். அவளை கண்டு, அவளுடைய உதிரப்போக்கை பற்றிக் கூறினார். அதற்கு அவள்... அவர், “உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று கூறினார். சரி. மத்.9:22, மாற்.5:30-34, லூக்.8:45-48 223. இப்போது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். புதிய ஏற்பாட்டில், எபிரெயர் புஸ்தகமானது, “சரியாக இப்பொழுது, அவர் உங்களுடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கிற, உங்களுக்காக பரிந்து பேசுகிற பிரதான ஆசாரியனாக இருக்கிறார்” என்று கூறுகிறது. ரோ.8:34, எபி.4:15 இப்போது இங்கே, அந்த ஒருவர் – வியாதியஸ்தர்களில் ஒருவரா நீங்கள்? வாருங்கள். 224. இப்போது, இது கூட்டத்தினருக்காக. நண்பர்களே, இதை நான் ஒரு காட்சிக்காக (show) செய்யவில்லை. இப்பொழுது, அவ்வாறு நினைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள், நான் உங்கள் எண்ணங்களை அறிகிறேன். அது உண்மை என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள் மற்றும் அதைக் காண்கிறீர்கள்? [சபையார் ‘ஆமென்’ என்று கூறுகின்றனர் - ஆசி.] 225. இங்கே ஒரு ஸ்திரீ இருக்கிறார் - அவரை நான் – நான் ஒருபோதும் பார்த்தது கிடையாது. அந்த ஸ்திரீயைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை நாங்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் பிறந்திருக்கலாம், வெவ்வேறு வருடங்களில் பிறந்திருக்கலாம், இன்றிரவில் இங்கே நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். ஒருவருக்கொருவர் நாங்கள் அந்நியர்களாய் இருக்கிறோம். நான் உன்னை அறியேன். இப்பொழுது எனக்கென்று ஒரு திட்டமும் இல்லை. இங்கே, இங்கே – பரிசுத்த யோவான் 4-வது அதிகாரத்திற்கு வருவோம், ஒரு – ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை சந்திக்கிறார். இப்பொழுது, நான் இயேசுவும் அல்ல இவள் அந்த ஸ்திரீயும் அல்ல. ஆனால் இங்கே அதைப் போன்று இருக்கிறது. மேலும் அவர், “நான் செய்கிற கிரிகைகளை நீங்களும் செய்வீர்கள்” என்று கூறியிருக்கிறார். இப்பொழுது, எனக்குத் தெரியவில்லை. அதைச் செய்வதற்கு அது இந்த ஸ்திரீயினுடைய விசுவாசத்தை எடுத்துக் கொள்கிறது. இவளைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், இப்பொழுது எது சத்தியம் என்பதை நான் கூறியிருப்பேனானால், அது சரியென்று செய்ய... கூற தேவன் கடமைப்பட்டவராய் இருக்கிறார். இப்போது உன்னை அறியாமலிருக்கிறேன், பரலோகத்தின் தேவன்... 226. நான் உண்மையைக் கூறினேன். நான் கூறினது உண்மை என்று நீ விசுவாசிக்கிறாயா? அது சத்தியம் என்று ஏற்றுக் கொள்கிறாயா? [அந்த சகோதரி, “அதை நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறார்கள் - ஆசி.] அதை நீ விசுவாசிக்கிறாயா? யாராவது ஒருவரை, என்னுடைய வயதுடைய ஒருவரை தவறாக வழிநடத்தும்படிக்கு, பரிசுத்த வேதாகமத்திற்கு முன்பாக நான் நிற்கவில்லை. அவ்வாறு செய்வேனேயானால், நியாயத்தீர்ப்பின் கூண்டில் தேவனுக்கு முன்பாக நான் நிற்கவேண்டும் என்பதை அறிந்திருக்கிறேன். ஒருநாளில் நாம் அங்கு நிற்கவேண்டும். நாம் அதை அறிவோம். 227. இப்போது, உங்கள் வாழ்க்கையில் நடந்ததைப் பற்றி தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நான் அதைப்பற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லை என்பதை அறிந்துள்ளீர்கள், ஏனென்றால் நான் உங்களை அறியேன். ஏதாவது ஒன்று இருக்குமென்றால், அது உங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒன்றாக இருக்கும். அதைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையிலிருந்து அது வந்திருக்க வேண்டும். வல்லமை எப்படிப்பட்டதாயிருக்கும் என்று நீங்கள் என்ன நினைத்திருந்தாலும், அதன் பிறகு அது உங்களைப் பொறுத்தது. 228. இப்போது, இதை புதிதாக வந்தவர்களுக்குக் கூறுகிறேன். இப்போது, என் கையைப் பற்றிக்கொள்கிறேன். இப்போது, தயவுசெய்து இங்குமங்குமாக நடந்து திரியாதிருங்கள். ஏனென்றால், பாருங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆவியாய் இருக்கிறீர்கள். நான் திரும்பும்போது, எல்லா இடங்களிலிருந்தும் ஒரு – ஒரு இழுப்பை போன்று நீங்கள் உணர்கிறீர்கள். பாருங்கள், நீங்கள் – நீங்கள் மனிதர்களாய் இருக்கிறீர்கள். மேலும் நீங்கள் ஆவிகளைப் பெற்றிருக்கிறீர்கள். மேலும், நீங்கள் ஒரு ஆவியாய் இருக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு பெற்றிருக்கவில்லையென்றால், நீங்கள் மரித்தவர்கள் ஆவீர்கள். எனவே சற்று நேரம், அதற்கு மரியாதை கொடுங்கள். 229. மேலும் இங்கிருக்கிற மனிதர்களே, ஜெபியுங்கள். நான் இதை எதிர்பார்க்கவில்லை, இன்றிரவு ஒருபோதும் நான் இதற்காக வரவில்லை. நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படிக்கே வந்தேன், ஆனால் இது புதிதாக வந்தவர்களுக்காக. 230. இப்போது அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்சனை என்னவென்றும், அல்லது நீங்கள் எதற்காக இங்கிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் செய்த ஏதோ ஒன்றை அல்லது நீங்கள் செய்யவேண்டியது என்ன என்பதை, அல்லது – அல்லது அது தவிர வேறு ஏதோ ஒன்றை, கர்த்தர் எனக்கு கூறுவார் என்றால், அப்பொழுது நீங்கள் விசுவாசிப்பீர்களா? சரி. உங்கள் ஆவியுடன் நான் தொடர்புகொள்ள முயற்சிக்கிறேன், நீங்கள் பாருங்கள். நான் செய்யவேண்டும் என்று முயற்சி செய்வது அதுதான். கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீக்கு அவர் செய்ததுபோல, அவர் அவளுடன் சற்றுநேரம் பேசினார். பாருங்கள், அவர் தாகத்திற்கு கேட்டார். அதையே தான் நானும் செய்ய முயற்சி செய்கிறேன். உங்கள் சிந்தையை பெறும்படி – உங்கள் சிந்தையை படிக்கும்படி அல்ல; ஆனால் அவர் செய்ததையே செய்ய முயற்சிக்கிறேன், உங்கள் எண்ணங்களை அறிந்து கொள்வது. 231. நீங்கள் இங்கு இருப்பது வயிறு சம்பந்தமான ஒரு பிரச்சனையாகும். நீங்கள் வயிற்றுப் பிரச்சனை உடையவர்களாய் இருக்கிறீர்கள். அது சரியே. அது உண்மை என்றால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்போது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது மட்டுமல்ல, ஆனால் வேறு ஏதோ ஒன்றுக்காக பசியுடையவர்களாய் இருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நீங்கள் பெற விருப்பம் உடையவர்களாய் இருக்கிறீர்கள். அது உண்மை என்றால் உங்கள் கரங்களை அசையுங்கள். பாருங்கள்? அந்த ஒளியானது அவள் மீது இறங்கி, பின்னர் பின்னால் நகர்வதை நான் கண்டேன், பாருங்கள். போய், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், தொடர்ந்து செல்லுங்கள். 232. புதிதாக வந்திருப்பவரே, இப்பொழுது விசுவாசிக்கிறீரா? [சபையார் ‘ஆமென்’ என்று கூறுகின்றனர் - ஆசி.] இப்போது நீங்கள் கூறுகிறீர்கள்... 233. இப்போது இங்கே, பாருங்கள், அந்த அபிஷேகம் ஒருமுறை தொடங்கிவிட்டால், பின்னர் அது இங்கே செல்கிறது. பாருங்கள், அந்த ஸ்திரீ எழுந்து நின்ற மாத்திரத்தில், அங்கே அவள் இருக்கிறாள், அவள் சரியாக இப்பொழுதே... தன்னைச் சுற்றிலும் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறாள். 234. அங்கு இருக்கிற அந்த ஒளி, அக்கினி ஸ்தம்பம் இருக்கும் படத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்? வாஷிங்டன் DC-ல் [கொலம்பியா மாவட்டம்] உள்ளது. பாருங்கள்? இப்போது நான் விரும்புவது... இது வேறொரு பரிமாணம், நான் அதை நேரடியாகப் பார்க்கிறேன். அங்கே அந்த ஸ்திரீயின் பக்கமாக அது தொங்கிக் கொண்டிருக்கிறது. நான் அதை சரியாக நோக்கி பார்த்து கொண்டிருக்கிறேன். 235. இப்போது, நான் இந்த ஸ்திரீக்கு முற்றிலும் அந்நியன். அவளை எனக்குத் தெரியாது. அவளுக்கு என்னை தெரியுமா என்பதில் நான் சந்தேகம் கொண்டுள்ளேன். இந்த கூட்டத்திற்கு மட்டும்தான் வந்துள்ளார்கள். அவ்வளவுதான். ஆனால் உங்களைக் குறித்து ஏதாவது ஒன்றைத் தேவன் எனக்கு கூறக்கூடுமானால், அல்லது ஏதோவொன்று சற்று நேரத்திற்குமுன் நடந்ததைப் போல நடந்தால், நான் அவருடைய தீர்க்கதரிசி என்றும், அவருடைய ஊழியக்காரன் என்றும் விசுவாசிப்பீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? நல்லது, அவர் அதை அருளிச் செய்வாராக. ஒரு அறுவை சிகிச்சையை நீங்கள் எதிர்கொள்ளப் போகிறீர்கள், அந்த அறுவை சிகிச்சையானது உங்கள் கைகள் சம்பந்தப்பட்டது. அதில் ஒரு குறிப்பிட்ட இடம் என்றில்லை, அது உங்கள் கையில் உள்ள நரம்பு சம்பந்தமான பிரச்சனை, இது ஒரு விபத்தினால் உண்டானது, (அந்த ஸ்திரீ ‘ஆம்’ என்கிறாள் - மொழிபெயர்ப்பாளர்). நீங்கள் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். நீங்கள் விசுவாசியுங்கள், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை! ஆமென். (அந்த ஸ்திரீ உணர்ச்சி வசப்படுகிறார். சபையார் ‘ஆமென்’ என்று ஆரவாரம் செய்கின்றனர் - மொழிபெயர்ப்பாளர்). என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 236. இப்போது விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். சந்தேகப்படாதீர்கள். விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். இப்போது, இங்கே இன்னும் ஒரு ஸ்திரீ வருகிறார், ஏனென்றால் இந்த ஸ்திரீ மிகமோசமான நிலையில் இருக்கிறார். அந்த கருப்பு நிழலை நீங்கள் காண்கிறீர்களா? எடுக்கப்பட்ட கருப்பான அந்த மரணத்தின் நிழலின் புகைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்? சரியாக இப்பொழுது அது அந்த ஸ்திரீயின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. தேவன் அவளுக்கு உதவி செய்யவில்லை என்றால், அவளால் பிழைக்க முடியாது. அவள் ஒரு கட்டியை உடையவளாய் இருக்கிறாள். அந்தக்கட்டி மூளையில் ஏற்பட்டிருக்கிறது. [‘ஆம்!’] ஊ-ஹூ. ஊ-ஹூ. ஊ-ஹூ. 237. அன்புள்ள தேவனே, இந்த எல்லாக் காரியங்களையும் அறிந்தவராக இப்போது மிகவும் அருகாமையில் நீர் இருப்பீரென்றால், அன்புள்ள தேவனே, நான் ஜெபிக்கிறேன், எங்களுடைய சகோதரியை நீர் சுகப்படுத்துவீராக. பிதாவே உம்முடைய மகிமைக்காக அவள் ஜீவிப்பாளாக. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 238. எப்படியிருக்கிறீர்கள்? நீங்கள் வலிமையான அருமையான ஒரு நபர். தாயார் இருந்திருப்பார்கள் என்றால், அவர்கள் உங்கள் வயதை உடையவளாய் இருப்பாள், நான் அவ்வாறு நினைக்கிறேன். இன்றிரவில் அவர்கள் மகிமையில் இருக்கிறார்கள். நான் கூட்டங்களுக்கு செல்லும் போதெல்லாம், எனக்காக எப்போதும் ஜெபிப்பார்கள். நான் கர்த்தரிடத்தில் கூறினேன்... [அந்த சகோதரி ‘நான் 85 வயதுடையவள்’ என்று கூறுகிறாள் – ஆசி.] அம்மையாரே? [‘நான் 85 வயதுடையவள்’] எண்பத்தைந்து வயது. சகோதரியே உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. 239. இப்போது, நான் உங்களுக்கு முற்றிலும் ஒரு அந்நியனாக இருக்கிறேன், நான் அவ்வாறு எண்ணுகிறேன். நம்முடைய வயதை பொறுத்த மட்டில் பலவருடங்கள் வித்தியாசம் இருக்கும். நான் உங்களை அறியேன். உங்களை நான் ஒருபோதும் பார்த்தது கிடையாது. பூமியில் நாம் இரண்டு பேரும் இப்போதுதான் சந்திக்கிறோம், ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு விசுவாசி. ஏனென்றால், உங்களை அவ்வாறு அறிந்து கொள்வதற்கு காரணம் என்னவென்றால், அது உங்களுடைய ஆவியின் உணர்வு. நீங்கள், நீங்கள் என்னை வரவேற்றீர்கள், பாருங்கள். மேலும், அது பரிசுத்த ஆவியானவர் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனென்றால் அது பரிசுத்த ஆவியின் கிரியைகளையும், நடபடிகளையும் கொடுக்கிறது. பாருங்கள்? அது அவரே என்று அறிந்திருக்கிறேன். நாம் பேசிக் கொண்டு இருக்கிற இந்த காரியங்கள் சத்தியம் என்று அறிந்திருக்கிறேன். இப்போது, இது சத்தியம் என்பதை அறிவேன். 240. இப்போது, என்ன கோளாறு என்பதை நான் அறியேன். ஆனால், உங்களுக்கு என்ன பிரச்சினை உண்டாயிருக்கிறது என்று கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்துவாரானால், அது சரியா அல்லது தவறா என்பதை நீங்கள் அறிவீர்கள், அல்லது நீங்கள் என்ன செய்தீர்களோ அல்லது நிச்சயமாக அதை செய்யவில்லையா என்பதை கூறுங்கள். பிலிப்பு எங்கே இருந்தான் என்று அவனிடம் கூற முடிந்த அதே தேவன், சீமோனிடம் அவனுடைய பெயர் என்ன என்பதை கூற முடிந்த அதே தேவன், அது அதே கர்த்தராகிய இயேசு என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதே ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்று நீங்கள் அவரை விசுவாசிக்கின்றீர்களா? 241. உங்களுக்கு என்ன பிரச்சினை என்றால் குடல் சம்பந்தமான பிரச்சினை. [அந்தச் சகோதரி, ‘மிகச்சரியாக’ என்று கூறுகின்றார்கள் - ஆசி.] அது மிகச்சரியானது. அது சரிதானே? [‘ஆம், ஐயா’]. இப்போது நான் அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய பெயர் திருமதி. பேயர் என்பதாகும்; (Mrs. Bayer) பேயர், பேயர் ஆஸ்பிரின் (Bayer Aspirin) என்பது போல. அது சரியா. நீங்கள் சுகமாக்கப்பட்டுவிட்டீர்கள். தொடர்ந்து செல்லுங்கள், இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்திவிட்டார். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. 242. உங்கள் முழு... விசுவாசிக்கிறீர்களா? இப்போது நீங்கள் விசுவாசமுடையவராய் இருங்கள், சந்தேகப் படாதீர்கள்! 243. இப்போது, உண்மையில், நீங்கள் உங்களுக்காக இங்கு இருக்கவில்லை. மற்றொருவருக்காக இங்கு இருக்கிறீர்கள், அவர் ஒரு மனிதன், அவர் இங்கு இல்லை, ஒரு சகோதரன். அந்த சகோதரன் ஒரு மனநல பள்ளியில் இருக்கிறார். உங்கள் கையில் பெற்றுள்ள அந்தக் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள், உங்கள்மேல் ஆவி இருக்கும்போதே அதை அவருக்கு அனுப்பி வையுங்கள். அவர் மீது வையுங்கள், சந்தேகப்படாதீர்கள். அவர் அந்தப் பள்ளியை விட்டு வெளியே வந்து சுகமாய் இருப்பார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. 244. “நீங்கள் பார்க்கிற திசையை நோக்கி அந்த தூதனுடைய முதுகுபுறம் இருந்தது என்பதாக அங்கே கடந்த நாளில் நீங்கள் கூறினீர்களே” என்று நீங்கள் கூறுகிறீர்கள். 245. நான் இந்த ஸ்திரீயைப் பார்க்க போவதில்லை, முதுகு புறமாக திரும்பி கொள்கிறேன். இப்பொழுது, சீமாட்டியே, வியாதியாய் இருக்கிற அந்த ஒருவர், நான் கூறுவது கேட்கிறதா, “ஆம்” என்று சொல்லுங்கள். [அந்த சகோதரி, “ஆம்” என்று கூறுகிறார்கள் - ஆசி.] நான் இந்தப் பக்கமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது, கர்த்தராகிய இயேசு உங்களுடைய பிரச்சினை என்ன என்பதை எனக்கு வெளிப்படுத்துவாரானால், அது உண்மையா அல்லது உண்மையில்லையா என்பதை அறிந்து கொள்வீர்கள். அது சரியா? அப்படியானால், “சோதோமின் நாட்களில் நடந்ததுபோல, கடைசி நாட்களிலும் நடக்கும்” என்று இயேசு சொன்ன வார்த்தையின் நிறைவேறுதல் தான் இது என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? அதை விசுவாசிப்பீர்களா? உங்களுக்குப் பெண்களுக்குரிய ஒரு கோளாறு, பெண்களுக்குரிய ஒரு பிரச்சினை. இப்போது, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், அது உங்களைவிட்டு அகன்றுபோகும், நீங்கள் வீட்டுக்குப் போகலாம், சுகமாய் இருப்பீர்களாக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. “உங்களால் அதை விசுவாசிக்கக் கூடுமானால்!” லூக். 17:28-30 246. அந்த இருதய சம்பந்தமான பிரச்சினையை தேவன் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நல்லது, “கர்த்தாவே, உமக்கு நன்றி!” என்று கூறிக்கொண்டே, நடந்து செல்லுங்கள். விசுவாசியுங்கள்! 247. காலையில் எழுந்திருக்கிறீர்கள், அசைவதற்கு மிகக் கஷ்டப்படுகிறீர்கள். கீல்வாதம் என்பது ஒரு மோசமான நோய். ஆனால் இயேசு கிறிஸ்து கீல்வாதத்தை சுகமாக்குகிறவராக இருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் பாதையில் அடி எடுத்து வைக்கையில் ஒரு பக்கமாக, கீழே இறங்குகிறீர்கள். நீங்கள் அவ்வாறு செய்வதை நான் பார்க்கிறேன். நீங்கள் விசுவாசித்தால் அவ்வாறு நீங்கள் ஒருபோதும் செய்யவேண்டியது இல்லை. இந்த நோக்கத்திற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்தச் சகோதரி “நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறார் - ஆசி.] அப்படியானால், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் அது அவளை விட்டு நீங்குவதாக. ஆமென். 248. உங்களுக்கு வயிற்றில் பிரச்சினை. நீங்கள் வீட்டிற்கு சென்று, இரவு உணவை உண்டு, அதைக் குறித்து நல்ல உணர்வை அடையும்படி தேவன் செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் பாதையில் செல்லுங்கள், இரவு உணவை புசியுங்கள், விசுவாசியுங்கள். நீங்கள் நன்றாக இருப்பதை உணர்வீர்கள். 249. உங்களுக்கு பலவீனம் ஏற்படுகிறது, அதுசரியா, ஏனென்றால் உங்கள் இருதயம் மோசமான நிலையில் இருக்கிறது. அது சரியே. இப்பொழுது நீங்கள் அதை பெற்றிருக்கவில்லை. செல்லுங்கள், அதை விசுவாசியுங்கள். 250. நான் உங்கள் மீது கரங்களை வைத்து உங்களிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லையென்றாலும் என்ன? நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? நீங்கள் சுகமடைவீர்கள் என்றும் விசுவாசிப்பீர்களா? இங்கே வாருங்கள். 251. அன்புள்ள பரலோகப் பிதாவே, இந்த ஸ்திரீயை சுகமாக்கி, அவளை சொஸ்தப்படுத்துவீராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக, ஆமென். 252. இங்கிருக்கிற உங்களில் எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள், புதிதாய் வந்திருப்பவர்கள் எத்தனை பேர், நீங்கள் எல்லாரும் விசுவாசிக்கிறீர்களா? 253. சற்றே யோசித்துப் பாருங்கள், ஜனங்கள் எளிதாக வந்துகொண்டு இருப்பதை என்னால் காண முடிகிறது. ஒரு தரிசனம் கர்த்தராகிய இயேசுவை பலவீனம் அடையச் செய்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? ஒரு ஸ்திரீ அவரைத் தொட்டாள். தானியேல் ஒரு தரிசனத்தை கண்டு, அவன் தன் சிந்தையில் கலக்கமுற்றான், அவனுடைய தலையில், பல நாட்களாக கலக்கமுற்றான். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? 254. இப்போது, இது பரிசுத்த ஆவி என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் முழு.... விசுவாசிப்பீர்கள் என்றால்... இப்போது, நான் அல்ல. பரிசுத்த ஆவியானவர்! இங்கே ஒரு மனிதன் அமர்ந்துள்ளார், அவரும்கூட அதை விசுவாசிக்கிறார். 255. இப்போது சிலர், உங்களில் இன்னும் சிலர் ஜெப அட்டையைப் பெற்றுள்ளீர்கள். இந்த ஜெப வரிசையில் வரவேண்டிய ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் எழுந்து நிற்கும்படி நான் விரும்புகிறேன். 256. பாருங்கள். ஆணித்தரமான ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கப் போகிறேன். அங்கிருக்கிற நீங்கள் உங்கள் அனைத்து பாவங்களையும் அறிக்கை செய்துவிட்டீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அறிக்கை செய்துவிட்டீர்களா, நீங்கள் – நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் பாவங்களை எல்லாம் அறிக்கை செய்து, எல்லா தவறுகளையும் சரிசெய்து விட்டீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள், நீங்கள் அவ்வாறு செய்துவிட்டால், தேவனுக்கு முன்பாக, அதை நீங்கள் விசுவாசியுங்கள். 257. இப்போது உங்கள் கரங்கள் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், அது பரிசுத்த ஆவியானவரை எடுத்துக் கொள்கிறது என்பதையும், இந்தப் பரிசுத்த ஆவியானவர் தாமே, உங்கள் மத்தியில் தம்மையே உறுதிப்படுத்துகிறார் என்பதையும்கூட நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர் - ஆசி.] நீங்கள் செய்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஒவ்வொருவரும் சுகமடைவீர்கள். 258. இங்கு உட்கார்ந்து இருக்கிற ஊழியக்காரர்கள் மீது நீங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் உடையவர்களாக இருக்கிறீர்களா? அந்த மனிதர்களையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் ஜெபித்தால் எப்படியாயிருக்கும், அப்படியானால் நீங்கள் அவர்கள் அருகாமையில் வரட்டும், உங்கள் மேல் அவர்கள் தங்கள் கரங்களை வைப்பார்களாக. 259. இது என்னை மிகவும் பலவீனப்படுத்துகிறது. அது அந்தவிதமாக சென்று கொண்டேயிருக்கிறது. அது – அது அப்படியே என்னை பலவீனப்படுத்துகிறது. 260. இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு நான் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லப்போகிறேன். ஏனென்றால், ஓ என்னே, அங்கே ஜனங்களோடு உங்களால் பேசக்கூட முடியாது. அங்கே... குறைந்தபட்சம் நாங்கள் அங்கே ஒரு நாள் கூட்டத்திற்கு மட்டும் மூன்று லட்சம் பேர் வருவார்கள் என்று எதிப்பார்க்கிறோம். 261. ஆகவே நீங்கள் விசுவாசித்தால் மட்டும் போதும்! இங்கே நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள், நீங்கள் அதன் உள்ளும் புறமும் பார்த்துள்ளீர்கள். 262. அன்புள்ள தேவனே, இந்த ஜனங்கள் தேவையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். பிதாவே, நீர் மாறாத தேவனாய் இருக்கிறீர் என்று இவர்களுக்கு உம்முடைய வார்த்தையினால் நிரூபிப்பதற்கு உம்மால் இன்னும் வேறு என்ன செய்யக்கூடும் என்று எனக்குத் தெரியவில்லை. கர்த்தாவே, நாங்கள் அநேக மகத்தான காரியங்களைப் பார்த்தோம் என்றும், உம்முடைய மேசையிலிருந்து அவ்வளவு நேர்த்தியுடன் (dainty), அற்புதமான நித்திய ஜீவ ஆகாரத்தை, நாங்கள் அதனோடு மிகவும் பழகினவர்களாக ஆகும் வரை... ஆகும் அளவிற்கு புசித்தோம் என்றும் நான் விசுவாசிக்கிறேன். அது – அது ஒரு வழக்கமான காரியமாக மாறிவிட்டது. நாங்கள் செய்யவில்லை, அதை நாங்கள் சரியான முறையில் அணுகவில்லை, கர்த்தாவே, நாங்கள் அதைப் பார்க்கும்போது, நின்று கொண்டு இருக்கிற என்னைக் குறித்தே நான் நினைக்கும்போது, சரியாக இங்கே அந்த ஆவியானது, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானது சரியாக இங்கே நின்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவனாய், நான் என் முழங்காலில் நிற்கவேண்டும். அவர் பூமியின் மேல் இங்கே ஜீவித்த போது அவர்மேல் இருந்த ஆவியானது, சரியாக இப்பொழுது இங்கே இருக்கிறது. மேலும் எளிமையான, தகுதியற்ற பாவிகளாகிய நம்மை, அவருடைய கிருபை மற்றும் இரக்கத்தின் மூலமாக, நம்முடைய ஜீவனை விலை கொடுத்து வாங்கினார் (bought our lives). அவருடைய கிரியைகளை நாமும் நடப்பிப்போம் என்று அவர் கூறினபடி, இன்றைக்கு நாம் அவருடைய கிரியைகளை நடப்பிப்பவர்களாக இங்கே இருக்கிறோம். “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.” இந்தக் காரியங்களை வாக்குப்பண்ணி, அவைகளை இந்தப் பூமியில் இங்கே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்! கர்த்தாவே, இந்தக் கடைசி நாட்களில் உம்முடைய ஜனங்களில் ஒரு பாகமாக நான் எண்ணப்படக்கூடும் என்பதற்காக நான் உமக்கு மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். 263. அன்புள்ள தேவனே, இந்த ஜனங்கள் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள். பிதாவே, அவர்கள் வியாதியாய் இருக்கிறார்கள். அவர்களைச் சுகப்படுத்துவதற்கு என்னிடத்தில் ஒரு வழியும் இல்லை. இப்போது நீரும் அதைச் செய்யப் போவதில்லை, அவர்களை நீர் ஏற்கனவே சுகப்படுத்திவிட்டீர். எங்களுடைய மீறுதல்களினிமித்தம் நீர் காயப்பட்டீர், உம்முடைய தழும்புகளால் நாங்கள் குணமானோம். ஆகவே, பிதாவே, இங்கே கடந்து செல்லுகிற அவர்கள் ஒவ்வொருவரும், அவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கும் போது, அவர்கள் சிலுவைக்கடியில் நடந்து செல்வது போன்று அவர்கள் வரட்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஏனென்றால், சந்தேகத்திற்கு இடமின்றி, உறுதிப்படுத்தப்பட்ட பரிசுத்த ஆவியானவர் இங்கே மேடையின் மீது இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். தேவனாகிய கிறிஸ்து சரியாக இந்தக் கூட்டத்தில் இருக்கிறார். ஒவ்வொரு பாவத்தையும் மன்னியும். ஒவ்வொரு அவிசுவாசத்தையும் எடுத்துப் போடும். இந்த வரிசையில் அவர்கள் கடந்து வரும்போது அவர்கள் ஒவ்வொருவரும் சுகமாக்கப்படுவார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை நான் கேட்கிறேன். ஆமென். ஏசா.53:5 264. [ஒரு சகோதரன், “சகோதரன் பிரன்ஹாமே, ஒவ்வொருவரையும் உட்காரும்படி செய்து, ஒரு சமயத்தில் ஒரு பகுதியை மாத்திரம் அழைத்தால், அப்படிச் செய்தால் அவர்கள் திரண்டு வர மாட்டார்கள்” என்று கூறுகிறார் - ஆசி.] ஆம், நல்லது. 265. இப்போது, இங்கே என்னோடுகூட நின்று கொண்டிருக்கிற என்னுடைய சகோதரர்களே, நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் செய்வீர்களா? 266. நீங்கள் பாருங்கள், அதைக் குறித்ததான ஒரு காரியம் அங்கே இருக்கிறது. அநேக சுவிசேஷகர்கள் ஒரு பட்டணத்திற்குள் சென்று, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிறார்கள், அது போன்ற மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள். அந்த சபையானது, அது சென்ற பின், அந்த – அந்த – அந்த ஜனங்கள் அந்த சுவிசேஷகனை சார்ந்தே கட்டப்பட்டிருக்கிறார்கள், பாருங்கள். ஜனங்களே, அது அப்படியல்ல. இந்த மனிதர்கள், என்னுடைய சந்தேகமானது இந்த வயதுடைய யாராவது... ஏராளமான ஆள்மாறட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, அதை நான் அறிந்துள்ளேன். ஆனால் நான் என்னவாக ஆக இருந்தேன் என்பதை நான் கூறமாட்டேன். ஆனால் இந்த மனிதர்கள் ஒருவேளை அதை செய்யாமல் போகலாம், அது உண்மை, ஆனாலும் நான் அதைக் குறித்து மிகவும் சந்தேகம் அடைகிறேன். 267. ஆனால் என்னைப் போலவோ அல்லது மற்ற ஒருவரைப் போலவோ வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பதற்கு அவர்களும் தேவனால் பிரதிஷ்டைப் பண்ணப்பட்டுள்ளனர். அங்கு ஏறெடுக்கிற ஜெபத்திற்கு தேவன் பதில் அளிப்பதைப் போலவே, அவர்களுடைய ஜெபத்திற்கும் தேவன் பதில் அளிக்க வேண்டியவராய் இருக்கிறார். “இந்த அடையாளங்கள்” என்று இயேசு கட்டளை கொடுத்தார். வில்லியம் பிரன்ஹாமை, ஓரல் ராபர்ட்ஸ்-ஐ (Oral Roberts), அது போன்றவர்களைத் பின்தொடரும் என்று இயேசு கூறவில்லை. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்.” இந்த மனிதர்கள் தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். அதே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்ற ஜனங்களாய் இருக்கிறார்கள். அந்த ஆவியானது சற்று முன்பாக அந்தக் கிரியைகளை செய்து கொண்டு இங்கே இருந்தது. அவர் இன்னமும் இங்கேதான் இருக்கிறார். இந்த மனிதர்கள் ஒவ்வொருவர் மேலும் அவர் இருக்கிறார், பாருங்கள், அவர்கள் அனைவரும் அதனால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். இங்கே இந்த பாதையின் இருபுறமும் இரண்டு ஜெப வரிசையை அமைக்குமாறு நான் அவர்களை கேட்டுக் கொள்ளப் போகிறேன். எனவே, அவர்களுக்கு விருப்பமானால், ஜனங்கள் கடந்து செல்லும்போது அவர்கள் தங்கள் கரங்களை வியாதியஸ்தர் மேல் வைக்கமுடியும். 268. ஜெப அட்டைகள் வைத்துள்ளோர், ஜெப அட்டைகளை மட்டும் வைத்துள்ளோர் பாதையில் வந்து நிற்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றனர். இப்பொழுது, சற்று நேரத்திற்கு மற்றவர்கள் எல்லோரும் ஜெபித்துக் கொண்டிருக்கவும். ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்களும், எழுந்து நில்லுங்கள், சரியாக உங்கள் பகுதியின் இடதுபுறத்தில் வந்து நிற்கவும். உங்கள் பகுதிக்கு வெளியில் நிற்கவும், அப்பொழுது அவர்கள் உங்களை அழைப்பார்கள். இந்த வரிசை முடியும் போது, அந்த வரிசையில் உள்ளவர்கள் வலதுபுறம் உள்ளே வரட்டும். இந்த வரிசை முடியும்போது, அதற்கு அடுத்த வரிசை அதற்குள் நடந்து வரட்டும். 269. அவ்வாறு இப்பொழுது நீங்கள் வரும்போது, ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், விசுவாசம் இல்லாமல் அவ்வாறு நீங்கள் நடந்து வரவில்லை. நீங்கள் இதைக் குறித்து ஜெபித்ததை உங்கள் இருதயங்களில் நீங்கள் உணர்கிறீர்கள் என்பதையும், மேலும் இந்த வரிசையை கடந்து செல்லும் போதே நீங்கள் சுகம் அடைந்துவிடுவீர்கள் என்பதையும் எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்தி, “கிறிஸ்துவே, சரியாக இப்பொழுதே நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் நீர் இந்தக் காரியங்களைக் குறித்து கட்டளை கொடுத்துள்ளீர்” என்று கூறுங்கள். 270. இப்பொழுது, உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். நாங்கள் ஜெபிக்கப் போகிறோம். நான் சகோதரி ரோஸ் (Sister Rose) அவர்களைக் கேட்கப் போகிறேன், எப்போதும் இசைக்கருவியில் உட்கார்ந்திருக்கும் ஒருவர், சகோதரி ரோஸ், மகத்தான வைத்தியன் இப்பொழுது இங்கே இருக்கிறார் என்ற பாடலை எங்களுக்காக வாசிப்பீர்களா? மற்ற ஜனங்கள் யாவரும் ஜெபத்தில் இருங்கள். இந்த ஜெப வரிசையை அவர்கள் கடந்து செல்லும்போதே ஒவ்வொருவரும் சுகம் அடைவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மற்றவர்கள் எல்லோரும் தங்கள் தலைகளைத் தாழ்த்தி, மற்றவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார்களாக. 271. மிகவும் உத்தமமாயிருங்கள். பாருங்கள், அன்றொரு இரவில், எப்படியாக அந்தச் சிறிய பாப்டிஸ்ட் பிரசங்கி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார். அதைக்குறித்து எண்ணமுடையவராய், அங்கே உட்கார்ந்த வண்ணமாய், மிகவும் உத்தமமாய் காத்திருந்தார், அவர்கள் அனைவர் மீதும் அது விழுந்தது. நீங்கள் தேவனுடன் உத்தமமாய் இருக்க வேண்டும். 272. இப்போது இங்கே அவர் உங்களோடு இருக்கிறார் என்பதை நிரூபித்துள்ளார். அவர் இங்கு இருக்கிறார். இப்போது, இது ஒரு வெறுமனே ஒரு உணர்ச்சிவசத்தின் தொகுப்பு என்று யாராவது உங்களிடம் கூறும்போது, இப்பொழுது நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள். அப்படித்தானே, புதிதாக வந்துள்ளவர்களே? இது அவர்தான் என்று அவரே தன்னை உறுதிப்படுத்திவிட்டார். அவரைத் தவிர வேறு ஒருவராலும் இவ்வாறு செய்ய முடியாது. அப்போஸ்தலர்கள் நாட்களிலிருந்து இப்படிப்பட்ட காரியங்கள் செய்யப்படவில்லை. அது இப்போதுதான் சபைக்கு வாக்களித்த விதமாக திரும்ப வருகிறது. இப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 273. இப்போது இங்கிருக்கும் ஜனங்கள் இந்த வரிசையில் கடந்து வரும்போது, ஜெபித்துக் கொண்டே வாருங்கள். இப்போது ஒவ்வொருவரும், “மகத்தான மருத்துவர் இப்போது அருகில் இருக்கிறார், இரக்கமுள்ள இயேசு” என்று பாடுவோம். இப்போது, நீங்கள் வரும்போது, உங்கள் தலைகளைத் தாழ்த்தி, பயபக்தியுடன் வாருங்கள். கடந்து வாருங்கள். இந்த மனிதர்கள் உங்கள் மீது தங்கள் கரங்களை வைக்கும்போது, நீங்கள் சுகமடைவீர்கள் [ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.] சேராபீன் பாடலின் இனிய சுரமே... ...?... அது பரவாயில்லை. நாளை இரவு ...?... 274. [ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.]...?... காரியங்கள். தேவன் என்ன செய்யும்படி கூறினாரோ, அதற்கு கீழ்ப்படியும் ஒரு எளிமையான காரியம். அநேக வேளைகளில் அவ்விதமாக நடந்ததை நான் கண்டுள்ளேன். பாருங்கள். வேதவாக்கியம் ஜனங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றுகூட நமக்கு கட்டளை இடவில்லை. “வியாதியஸ்தர்மேல் கரங்களை வையுங்கள், அப்போது அவர்கள் சுகமடைவார்கள்” என்றே அது கூறுகிறது. 275. ஓ, அது சமீபத்தில் நடந்தது... சமீபத்தில் என்று நான் சொல்லமாட்டேன். அது இப்போது என் சிந்தையில் இருக்கிறது. அது நடந்து மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கும் அல்லது அதற்கு மேலாககூட இருக்கலாம். நாங்கள் சரியாக இங்கே கலிபோர்னியாவில் இருந்தோம். இரண்டு ஸ்திரீகள் அங்கு வந்தார்கள், அதில் ஒருவருடைய முகத்தில் கட்டி வளர்ந்திருந்தது. மற்றொருவருக்கு வயிற்றில் கோளாறு ஏற்பட்டிருந்தது. அவர்கள் அவ்விதமாகவே விசுவாசித்தார்கள். அவர்கள் மீது என் கரங்களை வைத்தேன், “இப்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதைச் செய்கிறேன்” என்றேன். 276. ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து, வயிற்றுக் கோளாறுடன் அந்தச் சீமாட்டி, புசிக்க முயற்சி செய்தார்கள், அவர்களால் புசிக்க முடியவில்லை. ஒரு நாள் காலையில், ஒரு மெய்யான குளிர்ச்சியான உணர்வு அவள் மீது சென்றதாக அவள் கூறினாள். அவள் புசிக்கச் சென்றாள். அவளுடைய பக்கத்து வீட்டுக்காரரிடத்தில் அதை சொல்வதற்காக, அவள் கீழே இறங்கி ஓடினாள். அவளுடைய பக்கத்து வீட்டுக்காரரோ, அன்று இரவு மறைந்துபோன அவளது முகத்தில் வளர்ந்திருந்த கட்டியைக் கண்டுபிடிக்கும்படி இந்த விதமாக அவள் படுக்கையை உலுக்கிக் கொண்டிருந்தாள். 277. பாருங்கள், நண்பர்களே! வெறுமனே விசுவாசியுங்கள். ஒருவருக்கு அவர் அவ்வாறு செய்வார் என்றால், அதை அவர் எல்லோருக்கும் செய்வார். கரங்களை வைப்பது என்பது ஒரு எளிமையான காரியம். அதைத்தான் அவர் செய்யும்படிக் கூறினார். அது எப்படிக் கிரியை செய்கிறது என்பது நமக்குத் தெரியாது. அது எவ்வாறு கிரியை செய்கிறது என்பதை நான் அறியேன். அது அவருடைய வாக்குத்தத்தம், அவ்வளவே. அது கிரியை செய்யும் என்று அவர் கூறினார். உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர், அவர்கள் அப்படியே சுகத்தைப் பெற்றுக் கொண்டதை நான் கண்டுள்ளேன். தேவன் அதைச் செய்யும்படி வாக்களித்துள்ளார், அது அவருடைய வாக்குத்தத்தம். பாருங்கள், நாம் அதை விசுவாசிக்க மட்டுமே செய்கிறோம். 278. இப்போது, நாம் அனைவரும் இங்கே வந்து கொண்டிருக்கிறோம். எழுந்திருக்க முடியாதவர்கள், நெருங்கி வர இயலாதவர்கள், நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கும்படி அங்கே வருகிறோம். இப்போது, ஒவ்வொரு மனிதரும், அங்கே செல்லுங்கள், உங்கள் கரங்களை வையுங்கள், உங்களால் முடிந்தால், தொடர்ந்து அவ்வாறு செல்லுங்கள். நான் இங்கு நின்று கொண்டு, ஜெபிக்க விரும்புகிறேன். பிறகு நான் வந்து அவர்கள் மீது நானும்கூட என் கரங்களை வைப்பேன். சரி, இங்கே வாருங்கள். நீங்கள் அவ்வாறு நகர்ந்து அருகில் வாருங்கள், ஆகவே ஒவ்வொருவரும் வரமுடியும். 279. அன்புள்ள தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த ஜனங்களுக்காக ஜெபிக்கிறோம், அவர்களில் சிலர் ஊனமுற்றோராய் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கர்த்தாவே, அங்கே அந்த ஊழியக்காரர்களுடைய கரங்கள் ஒருவரிலிருந்து மற்றவருக்கு, முன்னால் செல்வதும், பின்னால் செல்வதுமாக இருக்கிறது. கர்த்தாவே, அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும்படி ஜெபிக்கிறேன். கர்த்தாவே, ஜனங்கள் ஒவ்வொருவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்குவாராக, பிதாவே. இப்போதே தேவனுடைய மகத்தான வல்லமை அவர்கள் மீது இப்போதே அசைவாடட்டும். வீட்டிற்கு சென்று சுகமாயிருப்பார்களாக. இயேசு “வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமடைவார்கள்” என்று கூறினதை அவர்கள் அறிந்துள்ளனர். அன்புள்ள தேவனே, அதை நீர் வாக்குப்பண்ணியுள்ளீர். அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். நாங்கள் அதை விசுவாசிக்கிறோம், ஏனென்றால் நீர் அவ்விதமாகக் கூறியுள்ளீர், அது அப்படியாக இருக்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆகவே இந்த ஜனங்கள் சுகமடைவார்களாக. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நான் அவர்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கிறேன். ஆமென். 280. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. [சகோ.பிரன்ஹாம் மற்றும் ஊழியக்காரர்கள் வியாதியஸ்தர் மீது கைகளை வைத்தும் மற்றும் ஜனங்களுக்காகவும் ஜெபிக்கின்றனர். நம்பிடுவாய் என்ற பாடல் பாடப்படுகிறது. ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.] 281. உங்கள் ஒவ்வொருவருக்காகவும் என் இருதயமானது சுகமளித்தலை ஏற்றுக் கொள்கிறது. அதை நான் விசுவாசிக்கிறேன். இப்போது, உங்களில் ஒவ்வொருவரும் என்னுடன் கூட அதை விசுவாசிப்பீர்களா? அவ்வளவுதான். நான் அறிந்த சத்தியத்தை உங்களுக்குக் கூறினேன். நான் உங்களை நேசிக்கிறேன், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் –நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று நான் என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். இப்போது, என்னுடைய ஆசீர்வாதம் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. தேவன் உங்களைக் குறித்து அக்கறை உள்ளவராகவும், உங்களைக் காக்கிறவராகவும் இருப்பாராக. நீங்கள் என் ஜெபத்தில் இருக்கிறீர்கள். அதுபோல, நான் ஆப்பிரிக்க தேசத்தில் இருக்கும்போது எனக்காக ஜெபிப்பீர்களா? நான் – நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களை நாளை இரவில் பார்க்கிறேன். *****************